September 27, 2021

அக்டோபர் 1 முதல் நாடெங்கும் லாரிகள் ஸ்ட்ரைக்!

சுங்ககட்டணத்தை நீக்குவது உள்ளிட்ட தங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துவிட்டது என கூறி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் கால வரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
loories strike
இது குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பிம் வாத்வா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செய்தியில்,” தவணை முறையில் சுங்க கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட எங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் போக்குவரத்து துறை அமைச்சகம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே சுங்க கட்டணங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும், சுங்க கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்தும் முறைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் நேற்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே வேறு வழியின்றி இந்த கடினமான முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.