September 18, 2021

ஃபோர்டு இந்தியா : உற்பத்தி ஆலைகளை மூட முடிவு!

மெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் மூட முடிவு செய்துள்ளனர். மேலும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடர ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவனம் லாபம் கிடைக்காமல் நஷ்டத்தில் செயல்ட்பட்டு வருகிறது.மேலும், புதிய மாடல் கார் உற்பத்தி மூலமாகவும் நஷ்டம் அடைந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி மிகவும் குறைவாக செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது இந்த முடிவால் சுமார் 4,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு நிறுவனம் மூடப்படவுள்ளதால், அதில் பணிபுரியும் தமிழர்கள் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.