நம் குழந்தைகளுக்கு ஏமாற்றம் தேவை!

நம் குழந்தைகளுக்கு ஏமாற்றம் தேவை!

எவ்வளவோ சொல்லிக் கொடுக்கிறோம் நம் குழந்தைகளுக்கு.. ஆனால் ஏமாற சொல்லிக் கொடுப்பதில்லை…என்னங்க எதுக்குங்க ஏமாற சொல்லிக் குடுக்கணும்னு கேக்கறீங்களா? ..உண்மைதான்..நம் குழந்தைகளுக்கு எமாற்றம் தேவை..அவர்கள் ஏமாற வேண்டும்….முட்டாள் தனமான பேச்சாக தெரிகிறதா? இல்லை..ஒரு விஷயம் அன்று நடந்ததை விட இன்று அதிகமாக நடக்கிறது ..என்ன ?..தற்கொலைகள்..! நடக்கும் தற்கொலை சம்பவங்களில் பெரும் சதவீதத்தினர் பள்ளி கல்லூரி வயதில் உள்ள இளையவர்களே..

child july 11

ஏன்.?.பரீட்சையில் ஃபெயில்..குறைந்த மதிப் பெண்கள்.. அதிக மதிப்பெண் வாங்கியும் மருத்துவம் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை….பருவ வயது காதல் தோல்வி…ராக்கிங் தாக்கு பிடிக்க முடியவில்லை..பெற்றோர் கடுமையாக திட்டினாதால் கூட விஷம் குடித்த இளம் வயதினர் ஏராளம்…இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் அவர்களுக்கு வரும் ஏமாற்றங்களை எதிர் கொள்ள முடியாமல் போவதே..இல்லையா?..ஆம்..அதற்காகத் தான் சின்ன வயதிலேர்ந்தே குழந்தைகளுக்கு நாம் ஏமாற சொல்லி தரணும்..சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கு அவர்களை தயார் படுத்தணும்..

எப்படின்னு கேக்கறீங்களா?

நாம் எல்லாருக்குமே குழந்தைகள் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும்…நம் சக்திக்கு மீறி கூட சில சமயங்களில் அவர்கள் கேட்டோ கேட்காமலோ அவர்களுக்கு நிறைய செய்ய ஆசைப் படுவோம்..பரிசு பொருட்கள் வாங்கி தருவதிலோ,சினிமா ,பார்க் ன்னு கூட்டிக் கொண்டு போவதிலோ நம் குழந்தைகள் கேட்கும் போது உடனே செய்ய வில்லை யென்றாலும் கொஞ்சம் தாமதித்து அவர்கள் விரும்பியதை நாம் செய்து கொடுத்து விடுகிறோம் தான்….இங்கே தான் அவர்களுக்கு ஏமாற்றம் தரணும்னு நான் சொல்றேன்.. எல்லா நேரமும் இல்லை..ஒரு சில சமயங்களில் ஏமாற்றத்தை நாமாக தரணும்.

உதாரணமாக.

  சினிமாவிற்கு போகலாமா என்று கேட்பார்கள் இல்லை கூட்டிக்  கொண்டு  போக முடியாது என்று சொல்வதில்லை நான் சொல்ல வருவது… நாம் இல்லை சொன்னால் அவர்களுக்கு வரும் ஏமாற்றத்தின் விளைவு நம் மீது கோவம் ..பின் வெறுப்பு..அந்த மாதிரியான ஏமாற்றம் இல்லை நான் சொல்ல வருவது

அவர்கள் கேட்கும் போது சரின்னு சொல்லணும்.அவர்களோடே குதூகலமாக நாமும் தயாராகணும்..பரவசத்தோடு அவர்களைக் கூட்டிக்கொண்டு தியேட்டருக்கு செல்லணும்…(டிக்கெட் இல்லை என்று நமக்கு முன்னரே தெரிந்திருக்கும்) இருந்தாலும் கூட்டிக் கொண்டு செல்லணும்….அங்கே ஹவுஸ் ஃபுல் போர்டை பார்த்து அவர்கள் ஏமாறணும்..

பிக்னிக் போகிறோம் என்று ஆசைக் காட்ட வேண்டும்..எங்கே என்பார்கள்..சூப்பர் இடம் ஒண்ணு..சர்ப்ரைஸ் ..நீங்களே வந்து பாருங்கன்னு சொல்லி ஆவலை ஏற்படுத்தி வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்குக்கோ பீச்சுக்கோ கூட்டிட்டு போய்டணும்..
அவர்கள் கேட்ட புத்தகமோ அல்லது பரிசு பொருளோ எல்லா நேரங்களிலும் வாங்கி தரவும் வேண்டாம் ..இல்லை வாங்கி தர முடியாதென்றும் சொல்ல வேண்டாம்..நாம் வாங்கி தர பிரயர்த்தனப் படுவது போலவும், நான்கு இடங்களில் ஏறி இறங்கி அந்த இடங்களில் கிடைக்கவில்லை என்ற பாவ்லாக்களை நாமே உருவாக்கணும்..

இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களில் நம் குழந்தைகள் ஏமாற வேண்டும்..அப்படி கிடைக்கும் சின்ன சின்ன ஏமாற்றங்கள் அவர்கள் பெரியவர்களாகும் போது சந்திக்கும் எந்த பெரிய ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ளும் சக்தியை ,மெச்சூரிட்டியை அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும்..

நினைத்து பாருங்கள்..இம்மாதிரியான சின்ன சின்ன ஏமாற்றங்களை நாம் எவ்வளவு சந்தித்திருப்போம்..காரணம் நம் வீட்டில் மட்டுமல்ல நம்மைச் சுற்றியும் வசதி வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன்.அதனால் ஏமாற நிறைய வாய்ப்புகள் இருந்தன .இப்ப இருக்குற டெக்னாலஜியிலும், சுற்றி இரைந்து கிடக்கும் நவீன வசதி வாய்ப்புகளிலும் அவர்கள் எட்டிய தூரத்தில் விரும்பிய நேரத்தில் அவர்கள் ஆசைப் படுகின்ற சின்ன சின்ன விஷயங்கள் நிறைவேறி விடுகின்றன..ஆகையால் குழந்தைகளைக் கொஞ்சம் ஏமாற விடுங்கள்.இதான் அவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த மாற்றத்தைக் கொண்டு வரும்..

செல்லிஸ்ரீ

Related Posts

error: Content is protected !!