நீங்கதான் கடவுளோட மறு உருவம்! – திருநங்கைகளிடம் விஜய் சேதுபதி!

நீங்கதான் கடவுளோட மறு உருவம்! – திருநங்கைகளிடம் விஜய் சேதுபதி!

ஆரண்யகாண்டம் என்ற படம் தமிழ் சினிமாவையே உலுக்கியது. உலக சினிமா ரசிகர்கள் கூட தலையில் தூக்கி கொண்டாடிய படம். இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். இந்த படம் திரைக்கு வந்த போது யாரும் தியேட்டரில் பார்க்காமல் சமூக வலைத்தளங்களில் தற்போது கொண்டாடி வருகின்றனர். இவர் நீண்ட வருடங்களாக தன் அடுத்தப்படத்தை தொடங்காமலேயே இருந்தவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். அதிலும் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தும்வரும் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற ‘திருநங்கைகளின் மாபெரும் விழா – 2017’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளின் மத்தியில் அவர் பேசும்போது, “எல்லாருக்கும் வணக்கம். ரொம்ப நாளா உங்க விழாவுல கலந்துக்கணும்னு ஆசை இருந்தது. அது இன்னிக்குத்தான் நடந்தது. உண்மையில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் இப்போ ஒரு படத்துல திருநங்கையாதான் நடிச்சேன். அதோட அனுபவம், அது வெறும் எமோஷன்ஸ் மட்டும்தான் இருந்தது. ஒரு மனுஷனை இன்னொரு சக மனுஷன் நிராகரிக்கிறது எவ்ளோ பெரிய வேதனை அப்படிங்குறதான் அந்தப் படத்துல நான் உணர்ந்தேன். உங்க எல்லாரையும் பார்க்கும்போது எனக்கு மரியாதை அதிகமாகுது. அன்பு அதிகமாகுது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீங்க யாரும் கடவுளோட பிள்ளை இல்ல, நீங்கதான் கடவுளோட மறு உருவம்னு நான் நினைக்குறேன்.

ஏன்னா உங்ககிட்ட பற்று பாசம்னு எதும் இல்லை. உங்களைப் பார்த்து கத்துக்கிறதுதான் நிறைய இருக்கு. சக மனுஷனை எந்த சாதி, என்ன மதம்னு பார்க்காம நேசிக்குறதை உங்ககிட்ட தான் கத்துக்கணும். இப்போ நம்ம சொசைட்டில அதை பத்தி நிறைய பேசுறாங்க. மனுஷங்களை ரொம்பப் பிரிக்குறாங்க. ஆனால் போலி இல்லாமல் பேசுறது பழகுறது உங்ககிட்ட தான் கத்துக்கணும். அதுக்காக உங்க எல்லாருக்கும் நான் தலைவணங்குறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “உங்க டான்ஸ் பார்த்துட்டு இருந்தேன். ரொம்ப நளினமா இருந்தது. ஆடும்போது அவ்ளோ சூப்பரா இருந்தது. எப்பவுமே நம்மகிட்ட இருக்குற பிரச்னை என்னன்னா… நமக்கு தேவையான விஷயத்தை இன்னொருத்தன் செய்வான்னு எதிர்பார்க்கிறோம். நம்ம சுதந்திரத்தை நம்மதான் கையில எடுக்கணும். நீங்க நடத்துற இந்த விழா ரொம்ப சின்னதா இருக்கு. இது இன்னும் பெருசா போகணும். ஆழமா பண்ணணும். சொஸைட்டில பாகுபாடே இல்லைன்னு இருக்குற நிலைமைதான் இருக்கணும். அது சாதாரண நிகழ்வா இருக்கணும். நம்ம வீட்ல ஒரு திருநங்கை இருக்காங்க அப்படிங்குறது சாதாரணமா இருக்கணுமே, தவிர அக்கம்பக்கத்தைப் பத்தி யோசிக்கிற விஷயமா இருக்கக் கூடாது.

அதனால அதை நீங்கதான் கையில எடுக்கணும். அதே மாதிரி இந்த சொஸைட்டி மாறணும். உங்களுக்கு இந்த சமூகத்துல வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கணும். நீங்க இன்னும் பெரிய இடத்துக்கு போகணும். கவர்மெண்ட் போஸ்ட்டுக்கு வரீங்க. ஆனா, இன்னும் அதிகமா அது நடக்கணும். படிப்புல மேலே வரணும். சொஸைட்டில நீங்களும் பெரிய ஆளா வரணும்” என்று உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!