யாகூ விலை போய் விட்டது!

யாகூ விலை போய் விட்டது!

பிரபல தேடுதல் தளமான யாகூவை வெரைஸான் தொலைதொடர்பு நிறுவனம் 4.83 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவன கைமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

yahoo soldout jy 26

இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், பேஸ்புக் போன்ற புது வரவுகளால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில் 483 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்குகிறது.

வெரைஸான் தொலைத்தொடர்பு நிறுவனம். யாகூ நிறுவனம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் வைத்துள்ள 15 சதவீத பங்கு மற்றும் யாகூ ஜப்பான் நிறுவனத்தில் உள்ள 35.5 சதவீத பங்கு ஆகியவற்றை தவிர்த்து உள்ள பங்குகள் கைமாறுகின்றன.

கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து வாங்க முன்வந்தது. ஆனால் யாகூ மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!