சீனவின் நிரந்தர அதிபர் ஆகிறார் ஜீ ஜின்பிங்! – தீர்மானம் நிறைவேறியது

சீனவின் நிரந்தர அதிபர் ஆகிறார் ஜீ ஜின்பிங்! – தீர்மானம் நிறைவேறியது

சீன அதிபர் ஜீ ஜின்பிங் நிரந்தர அதிபராக பதவி வகிக்கக் கூடிய வகையிலான வரலாற்று சிறப்புமிக்க புதிய சட்டத்திருத்தம் சீனாவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சீனாவில் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளை ஒருவர் இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும். இரண்டு முறைக்கு மேல் ஒரு நபர், அதிபராக பதவி வகிக்க முடியாது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அதன்படி, தற்போது அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங்கை நிரந்தர அதிபராக பதவி வகிக்க செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இன்று அதற்கான தீர்மானம் சீன நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

இதற்கு 2,958 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 3 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதால், இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் ஜீ ஜின்பிங் தமது ஆயுட் காலம் வரை, சீன அதிபராக பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு மீண்டும் மன்னராட்சிக்கு வழிவகுப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

error: Content is protected !!