உலக யானைகள் தினம்!

உலக யானைகள் தினம்!

லக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாது ப் காப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

உலத்துலே இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற்றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.

தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும். தந்தம் தான் யானையின் முக்கிய ஆயுதம். தந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக்கின்றனர். ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம். ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டையின் போது யானை தந்தத்தைத் தான் முக்கிய ஆயுதமாகப் பயன் படுத்தும். தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என அழைக்கப்படுகிறது. தும்பிக்கை மூலம் யானை வாசனை உணர்வுகளை அறிந்து கொள்கிறது. 1.5 கி.மீக்கு அப்பால் உள்ள மனிதனின் நடமாட்டத்தைகூட யானையால் அறிந்துகொள்ள முடியும்.

யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட் டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப் படுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.

யானைகளை காடுகளின் தோட்டக்காரர் என அழைக்கலாம். யானைகளின் சாணத்தில் முளைக்கும் திறன் பெற்ற விதைகளும், ஊட்டமான உணவுக் கழிவும் புதிய தாவரங்கள் முளைத்துக் காடுகளை வளமாக்க உதவுகின்றன. யானை, காடுகளில் இருந்து ஒரு பங்கு உணவைப் பெற்றால் பத்து பங்கு உணவு உற்பத்திக்குத் தேவையான மரம், செடிகளை உற்பத்தி செய்யும் வேலையை மறைமுகமாகச் செய்கிறது.  ஆம்.. காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம்.

காடுகளின் மூத்த குடிகளான யானைகளுக்கு ஒவ்வொரு காட்டின் நீர்வளம் எங்கே இருக்கும் என்பது அத்துப்படி. கோடையில் யானைகளால் கண்டறியப்படும் நீரூற்றுகளே பிற விலங்குகளின் தாகம் தணிக்கும் நீர் நிலைகள். மேலும் யானைகளுக்கு தினமும் 150 கிலோ முதல் 200 கிலோ உணவு தேவை. இலைகள், மரப்பட்டைகள், புற்கள், மரக்குச்சிகளை அவை உண்கின்றன. 12 மணி நேரத்தில் இருந்து 18 மணிநேரம் உண் பதிலேயே நேரத்தை செலவிடு கின்றன. குடிப்பதற்கும், உடல் வெப்பத்தை தணிக்கவும் தினமும் 220 லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. வறட்சி காலத்தில் இவை கிடைக்காதபோது, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.

யானை ஒரு முரட்டு விலங்கோ, கொடிய விலங்கோ அல்ல. மிகவும் மதிநுட்பம் வாய்ந்த விலங்கு. அதன் எல்லைக்கோட்டை அது நன்கு அறியும். பல நேரங்களில் காடுகளில் யானைகளை எதிர்கொள்ளும்போது அது, தான் இருக்கும் இடத்தை மரத்தின் கிளைகளை உடைத்து நம்மை எச்சரிக்கும்.

அதன் பிறகு நாய் குறைப்பதைப் போன்ற ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அதையும் மீறி அருகில் செல்வோரை தாக்க வருவதைப் போல காதுகளை விரித்து வாலை சுருட்டியபடி நீண்ட பிளிறலுடன் ஓடி வரும். அப்போதும் மனிதன் அதை எதிர்க்கத் துணிந்தால் அவ்வளவுதான். நொடிப் பொழுதில் எதிர்ப்படுவோரை துவம்சம் செய்துவிடும். அசாதாரணமாக இறுதி நொடியில் கூட பலரை கொல்லாமல் விட்டு விடும் இரக்க குணமும் அதற்கு உண்டு

யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப் படுகின்றன. இதை தடுக்கப்பட வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம்

error: Content is protected !!