விக்கிபீடியாவில் இப்பவாவது இணைஞ்சிக்கலாம் – வாங்களேன்!

விக்கிபீடியாவில் இப்பவாவது இணைஞ்சிக்கலாம் – வாங்களேன்!

விக்கிபீடியாவில் இடம்பெறும் எல்லா கட்டுரைகளும் மற்ற பல கட்டுரைகளுக்கான இணைப்புகளை கொண்டவை. இவற்றில் பல சுவா ரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இணைப்பாக கிளிக் செய்து படித்துப்பார்ப்பது கொஞ்சம் சோதனை யான அனுபவமாக தான் இருக்கும். இதற்கு மாறாக இணைப்புகளின் உள்ளடக்கத்தை சுருக்கமான அறிமுகத்தோடு முன்னோட்டமாக பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும். இதற்கென உள்ள ஹோவர்கார்டு வசதியை உறுப்பினர்கள் பிரபர்ன்ஸ் பகுதிக்கு சென்று வர வைத்துக் கொள்ளலாம்.
wikepedia apr 30
இதே பகுதியில் சென்று தொடர்புடைய கட்டுரைகள் அம்சத்தை கிளிக் செய்தால், ஒவ்வொரு கட்டுரையின் அடிப்பக்கத்திலும் தொடர்புடைய கட்டுரைகளுக்கான இணைப்புகளை பார்க்க முடியும்.இந்த வசதி மூலம் விக்கிபீடியாவில் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

 புதிய டேபில் இணைப்புகள் ;

விக்கிபீடியா கட்டுரைகள் ஆதாரங்களுக்கான அடிக்குறிப்புகளை கொண்டிருப்பவை. தகவல்களின் நம்பகத்தன்மையை உணர்த்துவதற்காக இது கைகொடுக்கிறது. ஆனால் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் போது , இணைப்புகளில் கிளிக் செய்தால் அந்த பக்கத்திற்கு அழைத்துச்செல்லப்படுவோம். மீண்டும் கிளிக் செய்து மூல கட்டுரைக்கு திரும்பி வரவேண்டும்.இந்த சங்கடத்தை தவிர்க்க, பிரபரன்ஸ் பகுதிக்கு சென்று பிரவுசிங் அம்சத்தில் இணைப்புகளை தனியே புதிய டேபாக தோன்றும் வசதியை இயக்கி கொள்ளலாம்.

வெவ்வேறு பின்னணி

விக்கி பீடியா கட்டுரைகளின் தோற்றம் உங்களுக்கு அலுப்பூட்டலாம். எனில் வேறு பல பின்னணி வண்ணங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு நான்கு விதமான வசதிகள் இருக்கின்றன.

விளம்பரம் நீக்க வசதி!

அதே போல விக்கிபீடியாவை ஆண்டிற்கு ஒரு முறை தோன்றக்கூடிய நன்கொடை கோரும் விளம்பர அறிவிப்பையும் நீக்கிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. அதே போல நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் கட்டுரையின் பக்கத்தை கவனிக்க விரும்பும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பக்கத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பெற முடியும்.

இந்த வசதியை உங்களுக்கு பிடித்தமான கட்டுரைகளுக்கான புக்மார்க் வசதி போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற உறுப்பினர்களையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல குறிப்பிட்ட தலைப்பை பின் தொடரும் ஆர்வம் இருந்தால் அந்த தலைப்பு தொடர்பான அறிவிப்புகளை கவனிக்க விரும்பும் பட்டியலில் பெற ஏற்பாடு செய்யலாம். கட்டுரை பக்கத்தின் மேல் உள்ள கவனிப்பு பட்டியல் ஐகானை கிளிக் செய்து அந்த கட்டுரையை நமக்கான பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் ஆண்டின் சிறந்த புகைப்படம் போன்றவற்றின் மீது வாக்களிக்கும் உரிமையும் பெறலாம். இப்போது இணைந்தால் கடந்த ஆண்டுக்கான புகைப்படங்கள் மீது வாக்களிக்கலாம். மேலும் பல அம்சங்களும் இருக்கின்றன.

புதிய பக்கங்களை துவக்குவது, பெயர் மாற்றம் செய்வது ஆகிய அம்சங்கள் இதில் அடங்கும்.

உங்களுக்கான பயனர் பெயரையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

வாசிப்பதை மீறி , விக்கிபீடியா தன்னார்வலர்கள் சமூகத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று விக்கிபீடியா உறுப்பினர் பக்கத்தில் அழைப்பு விடுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு:  இங்கு க்ளிக் செய்யவும்

சைபர்சிம்மன்

error: Content is protected !!