நாட்டு மக்களின் அத்யாய தேவைகளை மறுப்பதும் வன்முறையே! – AanthaiReporter.Com

நாட்டு மக்களின் அத்யாய தேவைகளை மறுப்பதும் வன்முறையே!

LKG படிக்க பையை முதுகில் மாட்டிவிட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டு கல்லூரி முடித்து கடைசி நாள் அதில் இருந்து இறங்கிய ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். சமூகம், அரசியல் சார்ந்த பெரிய இன்னல்களை சந்திக்காமல் வளர்ந்தவர்கள். எங்களுக்கு இருந்து பெரிய சவால்கள் என்றால் ‌அது ரிப்போர்ட் கார்டில் அப்பா கையெழுத்து வாங்குவது, ID cardஐ மறக்காமல் shave செய்துவிட்டு கல்லூரி செல்வது, Arrears clear செய்து வேலைக்கு சென்று education loanஐ அடைப்பது போன்ற தனிமனித பிரச்சினைகளே.

கையை கட்டி வாயில் கைவைத்து எதையும் எதிர்க்காமல் rules and regulations follow செய்து தன் வேலையை சரியாக செய்வதுதான் ஒழுக்கம் (discipline) என்று கற்ப்பிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வளர்க்கப்பட்வர்கள் நாங்கள்.

கடந்த சில வருடங்களாக சந்திக்கும் சமூக, அரசியல் நிலையாமை எங்களுக்கு புதிது. அதன் காரணமாகவே IPL venue மாற்றப்பட்டுவிட்டது குழாய்யில் காவிரி நீர் நாளை வந்துவிடுமா ? போன்ற அபத்தமான கண்ணோட்டத்துடன் பேசுகிறோம். இந்நிலை தொடர்ந்தால் போக போக சமூக பிரச்சினைகள் என்றால் என்ன அதன் அபாயம் அதன் பின் உள்ள அரசியல் போன்றவற்றை புரிந்துக் கொள்ள தள்ளப்படுவோம்.

அன்று Bleed yellow என்று கூவாமல் குடிக்க தண்ணீ கொடுங்கடா சுத்தமான காத்து வேணும்டானு குரல் கொடுக்க வந்துவிடுவோம் ( சிலர் ஏற்கனவே வந்துவிட்டனர் ). அதுவரை எங்கள் அரை வேக்காடு கருத்துகளை பொறுத்துக் கொள்ளவும் நாங்கள் உங்கள் natural and political exploitationகளை பொறுத்துக் கொண்டதை போல.

பி.கு.

வன்முறை என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மைதான். அதே சமயம் நாட்டு மக்களின் அத்யாய தேவைகளை மறுப்பதும் வன்முறையே என்பதை ஆதிக்க வர்க்கத்தினர் ஒற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
7 கழுத வயசான 90s Kid.