ஒவ்வொரு துளி நீரிலும் நம் பெயர் இருக்கிறதா? என்று பார்த்து செலவழியுங்கள்!

ஒவ்வொரு துளி நீரிலும் நம் பெயர் இருக்கிறதா? என்று பார்த்து செலவழியுங்கள்!

வெயிலோடு சேர்த்து வறட்சியும் மக்களை வாட்டி எடுக்கிறது. அடிக்கும் அக்னி வெயிலுக்கு தண்ணீர் தேடி அலைகின்றனர் மக்கள். ஆனால் எவ்வளவு அலைந்தாலும் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதிலும் மெட்ரோ சிட்டிகளான சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் நிலையை சொல்ல வேண்டியதில்லை. மக்கள் காலிக்குடங்களோடு தண்ணீர் வேட்டையை நடத்துகின்றன ஒரு சில மணி நேரமல்ல ஒரு நாள் முழுவதும். சில இடங்களில் லாரி தண்ணீர் ஒரு குடம் கூட கிடைக்கவில்லை என போராட்டம் வெடிக்கிறது.

சரி நகர்புற மக்கள் இப்படியென்றால் கிராம மக்களின் நிலை மோசமாக இருக்கிறது தனது கிராமத்தில் தண்ணீர் கிடைக்காமல் நான்கைந்து கிராமம் அலைந்து திரிந்து தண்ணீரை பானை களில் கொண்டுவருகிறார்கள். இந்த தண்ணீரை அவர்கள் குழாயில் இருந்து பிடிக்கவில்லை சில இடங்களில் ஊறும் ஊற்று அதில் சின்ன தூக்கு வாளி நிலத்தடி அதிலும் நீர்மட்டம் குறைந்த இடங்களில் ‘சேரட்டை’ என சொல்லக்கூடிய தேங்காய் ஓடுகள். இதை எடுக்கும் போதே அடிக்கும் சென்ஞ்சூரி வெயிலின் தாக்கத்தில் கால் குடம் அளவுக்கு தண்ணீர் குடிக்க வைத்திருக்கும் மனித உடம்பு. இதுமட்டுமல்ல இது கோடைகாலம் அதிலும் பள்ளி விடுமுறை காலம் தன் பிள்ளை களையும் தண்ணீர் எடுத்து செல்ல அழைத்து சென்றால் கூடுதாலாக கிடைக்குமென பிள்ளைகளையும் உடன் அழைத்து செல்கிறார்கள் தண்ணீர் தேடி அலையும் இல்லத்தரசிகள்.

இப்படி தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது முதல்முறையல்ல பல தடவை தன்னுடைய தண்ணீர் பஞ்சமானது தன் முகத்தை வறட்சியாக காட்டி இருக்கிறது அதுவும் கோடைகாலமாக இருக்கும் இப்போது தனது முகத்தை உக்கிரமாக காட்டுகிறது தண்ணீர் பஞ்சம். இதுவும் தண்ணீருக்கான உலகப்போர் வரலாம் என்ற சமிக்கைதான். ஆனால் நாம் அதை காதில் கூட வாங்க தயாராக இல்லை. மாதம் மாதம் காய்கறிக்கு,மருந்துக்கு,பெட்ரோலுக்கு காசை ஒதுக்குவது போல தண்ணீருக்கும் மாதம் காசை ஒதுக்கி வைத்து வாங்கிவிடலாம் என முடிவெடுத்துவிட்டோம். அதன் விளைவுதான் பெரு நகரங்களில் மாதம் 5000-லிருந்து 7000-வரை தண்ணீர் வாங்க ஒவ்வொரு குடும்பங்களில் பட்ஜெட்டானது மாத மாதம் ஒதுக்கப்படுகிறது. காசு நம்மிடம் இருக்கிறது தண்ணீர் வாங்க முன்வந்துவிட்டோம் ஆனால் நிலத்திடம் இருந்தால் தானே நமக்கு தண்ணீர் என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பினால் அதற்கு நம்மிடம் பதில் இருக்குமா என தெரியவில்லை.

நிலத்தடி நீர் மட்டத்தை பற்றியே மறந்துவிட்டோம் பின் எப்படி நம்முடைய நிலத்தடி நீரைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். பருவ மழையும் பொய்துவிட்டது அதுதான் வறட்சிக்கு காரணம் என்ன நாம் தேர்தெடுத்த அரசியல் வாதிகள் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறார்கள். ஆமாம் பருவ மழை பொய்துதான் விட்டது ஆனால் மழை பெய்யும் போது அதிகமாக பெய்த மழையை அணைகளிலும், ஆறுகளிலும்,குளங்களிலும், கண்மாய்களிலும் ஏன் சேமிக்கவில்லை. காரணம் முறையாக தூர்வாரவில்லை தூர்வார ஒதுக்கிய பணத்தை இவர்கள் தூர்வாரிவிட்டார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட ஒரு சந்திப்பில், “தமிழகத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சரியான நேரத்திற்கு பெய்யாமல் போனதுதான் இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம். ஆனாலும் கோடை காலத்தில் தமிழக மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படகூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இதை சரிசெய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் வறட்சியாக இருக்கும் இடங்களிலும் தண்ணீரானது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுப்போக தேர்தலுக்கு முன்பே குடிநீர் தேவைகான நிதிகளை ஒதுக்கிவிட்டிருப்பதால் தண்ணீர் பிரச்சனைப் பற்றி மக்கள் கவலைப்பட தேவை யில்லை” என சொல்கிறார் முதல்வர்.முதல்வர் பழனிசாமி சொல்வது போல வறட்சியை தடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை இந்த துரித பணிகள் முடிவதற்குள் கோடைகாலம் முடிந்திருக்கலாம். ஆகவே அரசாங்கத்தை நம்பாமல் இனிவரும் காலங்களில் ‘ஒவ்வொரு அரிசியில் நம் பெயர் இருப்பதை ஒரு துளி நீரிலும் நம் பெயர்கள் இருப்பதாக நினைத்து’ நிலத்தடி நீரை பெருக்குவோம் தண்ணீர் வறட்சியை விரட்ட சிக்கனத்தை கையாள்வோம்.

சி.தா.வீரமணி

error: Content is protected !!