அர்ஜுன், விக்ரம்பிரபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்‌ஷன் படம் “வால்டர்” – AanthaiReporter.Com

அர்ஜுன், விக்ரம்பிரபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்‌ஷன் படம் “வால்டர்”

கழுகு 2 படத்தை தயாரித்து வரும் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தனது அடுத்த படம் குறித்து நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், “அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடிக்கவுள்ளார். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ வேறு ஒருவர். ஹீரோ மற்றும் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பார்” என சஸ்பென்ஸ் வைத்தது. அதன்படி, இயக்குநர் லிங்குசாமி இன்று படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிப்பார் என்றும், இப்படத்திற்கு `வால்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது எனக் கூறி போஸ்டரை வெளியிட்டார்.

இந்தப் படத்தில் அர்ஜுன் விக்ரம் பிரபு ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்.மாயவன் படத்துக்கு பிறகு பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் இந்தப் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

ஒளிப்பதிவு  –   சதீஷ்குமார் 

இசை –    அர்ஜூன் ரெட்டி படப் புகழ்  ரதன் இசையமக்கிறார்.

எடிட்டிங்  –   கோபிகிருஷ்ணா

கலை  –   A.R.மோகன் 

நடனம்  –  தஸ்தா, ஷெரிப்

சண்டை பயிற்சி  –    விக்கி

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் U.அன்பரசன். இவர் இயக்கும் முதல் படம் இது.

தயாரிப்பு  –   சிங்காரவேலன்.

படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி  மதுரை கும்பகோணம் தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக வால்டர் படம் உருவாகிறது.