ரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி – ஆண்மையை அதிகரிக்குமாம்!

ரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி – ஆண்மையை அதிகரிக்குமாம்!

நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகி றோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கி றோம். சிலர் அதற்கும் நேரமில்லாமல் குளியலறைக்குச் சென்று சிறிது சிறிது தண்ணீரில் முகத்தைக் கழுவிக்  கொண்டு, சிறிது தண்ணீரைத் தலையிலும் தெளித்துக்கொண்டு வருவோம். அப்போது கேட்பார்கள், “என்ன இன்று காக்காய்க் குளியலா?” என்று. ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று யோசித்தால், காக்காய் திடீரென்று குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீர்நிலைகள் அருகிலே வரும். எப்போதுமே காக்காய்க்கு சந்தேகம் அதிகம். அதனால் யாராவது வந்துவிடப் போகிறார்களே, யாராலாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தலையை ஒரு முக்கு தண்ணீரில் முக்கிவிட்டு, பலமுறை தலையை சிலுப்பிக்கொள்ளும். அதுபோல அரைகுறைக் குளியல் போட்டுவிட்டு வரும் நம்மை அப்படித்தான் கேட்பார்கள். என்னடா  ஒரு  சாதாரணக் குளியலுக்கு இவ்வளவு வியாக்யானங்களா என்று யோசிப்போக்கிறீர்களா?

ஒரு விஷயம் தெரியுமா? நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள்தான் பஞ்சபூத குளியல் எனப்படுகிறது. இக்குளியலின் நோக்கம், “உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான். கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறி களும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன.

இதனிடையே உலகின் சக்தி வாய்ந்த தலைவராக திகழும் ரஷ்ய ஜனாதிபதி புதின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மற்றும் பல்வேறு மருத்துவ நலன்களை பெற அல்டை மலைக்கு சென்று சிவப்பு மானின் இரத்தத்தில் குளிப்பார் என தெரிகிறது. அதாவது, மாரல் மான்கள் என கூறப்படும் சிவப்பு மான்களின் கொம்புகளில் இயற்கையான வயாகரா மற்றும் ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள் இருக்கிறதாம். இவ்வகை மான்களின் கொம்புகளை வெட்டி அதன் இரத்தத்தை குளியல் தொட்டியில் ஊற்றி குளிப்பது என்ற வழக்கம் பண்டை காலத்திலிருந்தே அல்டை மலைகளில் நடைமுறையில் இருப்பதாக தெரிகிறது. இந்த இடத்துக்கு பல தடவை சென்றுள்ள புதின் இரத்தம் உள்ள குளியல் தொட்டியில் குளிப்பார் என தெரிகிறது. ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் -யும் இரத்த குளியலை மேற்கொள்வாராம்.

இது குறித்து புதின் , அலெக்ஸாண்டர் சூய்கோவ் என்ற புகழ்பெற்ற மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே இதை செய்வதாக தெரிய வந்துள்ளது.மான் இரத்தத்தில் குளிப்பதால் உடல் எலும்புகள், தசைகள், பற்கள் வலுவாகும் என கூறப்படுகிறது. மேலும், ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினைகள் கூட குணமாகும் என தெரிகிறது.முதலில் சிவப்பு மான்களின் கொம்புகளில் உள்ள இரத்தம் எடுக்கப்பட்டு சூடு செய்யப்படுகிறது. பிறகு குளியல் தொட்டிகளில் இரத்தம் ஊற்றப்படுகிறது. இது போன்ற நவீன யுகத்தில் மான்களின் இரத்தத்தில் குளிப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என மிருக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!