விழித்திரு – விமர்சனம் = பார்க்க தகுந்த படம்.

விழித்திரு – விமர்சனம் = பார்க்க தகுந்த படம்.

நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்யாத வரை மட்டுமே அவர் நமக்கு அந்நியமானவர். இரண்டில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அவர் நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிடுகிறார் என்னும் கருத்தை ஆழமாக இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களில் சொல்ல முயன்றிருக்கிறார் மீரா கதிரவன். இப்போதெல்லாம் கதை என்ன என்றே தெரியாமலும் அல்லது ஒரு கதையை குழப்பம் கொஞ்சம் கூட சொல்வதற்கே நாக்கு தள்ளும் டைரக்டர்களை சீண்டி பார்க்கும் போக்கும் ஒரே இரவில் நான்கு கதைகள் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார். அது என்ன நான்கு கதைகள் என்ன? என்று கேட்டால் கொஞ்சம் நீளமாக சொல்ல வேண்டி இருக்கும். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் நான்கு வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த ஒருவருக்கு ஒருவர் முன் அறிமுகம் இல்லாத மனிதர்கள் காலச்சூழ்நிலையால் ஒரே இடத்தில் இணைகிறார்கள் ப்ளஸ் பிரிகிறார்கள்.. அது ஏன்? மற்றும் எப்படி என்பதைதான் காரம், மணம், & மசாலா சேர்த்து ‘விழித்திரு’ என்ற தலைப்பில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இந்த படம் குறித்து மீரா கதிரவனின் சகாவான தங்கர் பச்சான் சொன்னதை இங்கு நினைவு கூற வேண்டியது அவசியம். “என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் மீரா கதிரவனின் இரண்டாவது படமான “விழித்திரு” திரைப்படம் பல இன்னல்களைக் கடந்து வெளியாகியுள்ளது. வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் கற்காமல் இலக்கியம், அரசியல் புரிதலுடன் படைப்புகளை உருவாக்கும் பயிற்சி பெற்றவர் இவர்.

சிறந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த நாட்டில் நல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியிருக்கிறது. அவ்வாறு தான் மீரா கதிரவனும் தயாரிப்பாளராக வேண்டியிருக்கிறது. படம் சரியில்லை என எத்தனை பேர் சொன்னாலும் எவ்வாறு அது சரியில்லை என பார்ப்பதற்காகவே, மக்கள் விழுந்தடித்துக் கொண்டு போய் மசாலா நடிகர்களின் படத்தைப் பார்த்து நூறு கோடி இருநூறு கோடி என அள்ளிக் கொடுக்கிறார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட நடிகரல்லாத படம் ஒன்று எவ்வளவு தான் சிறப்பாக இருப்பதாக எத்தனைப்பேர் சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை. இதனாலேயே இந்த சமூகத்திற்கு பங்களிக்க வேண்டிய பல சிறந்த கலைஞர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். இந்நிலை தான் திரைப்படத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தொடர்கிறது.

இனியும் இப்படிப்பட்ட தவறுகளுக்கு தமிழ் சமூகம் இடம் தரக்கூடாது. நான் எனது குடும்பத்தினருடன் இப்படத்தை பார்த்தேன். தமிழ் சினிமாவிற்கு புதிய பாணியில் அமைந்துள்ள இந்த படம் அனைவரையும் கவரும் படியான சலிப்பு தட்டாத படமாக உள்ளது. நாம் ஆதரவளிக்க வேண்டிய நல்ல படைப்பாளனான மீரா கதிரவனின் “விழித்திரு” திரைப்படம் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளதை வழி மொழிகிறோம்..

மொத்ததில் தங்கர்பச்சான் சொன்னது போல் புது பாணியில் அமைந்துள்ள சலிப்பு தட்டாத விழித்திரு பார்க்க தகுந்த படம்.

மார்க் 5 / 3

error: Content is protected !!