அமெரிக்கா அரசு அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு – AanthaiReporter.Com

அமெரிக்கா அரசு அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில், அரசு கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த நபர்களை நோக்கி பாரபட்சமின்றி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 6 பேரை, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அரசு ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. எதற்காக அவர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்