குஜராத் வன சரணாலயத்தில் சிங்கங்கள் உயிரிழக்கும் காரணம் தெரிந்தது! – AanthaiReporter.Com

குஜராத் வன சரணாலயத்தில் சிங்கங்கள் உயிரிழக்கும் காரணம் தெரிந்தது!

இந்தியாவின் சிங்கங்கள் சரணாலயமான கிர் தேசிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. சிங்கங்களின் இந்த திடீர் மரணத்திற்கு சிடிவி (CDV) எனப் படும் கனைன் டிஸ்டம்பர் வைரஸ் (Canine Distemper Virus) தான் காரணம் எனறு இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) இன்று அறிவித்தன.

சிங்கம் நாம் நினைப்பதை விட பல மடங்கு பிரம்மாண்டமானது. ஆனால், பூனை குடும்பத்தை சேர்ந்த சிங்கம் தீக்கோழி உதைத்தால் கூட உயிரிழந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும், முள்ளம் பன்றி கூட சிங்கத்தை எதிர்த்து சண்டையிடுமாம். இதை எல்லாம் நினைத்து ஆச்சரியப் படும் முன்பு ஒரு தகவலை கேளுங்கள். நம் இந்தியாவின் சிங்கங்கள் சரணாலயமான கிர் தேசிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. சிங்கங்களின் இந்த திடீர் மரணத்திற்கு சிடிவி (CDV) எனப்படும் கனைன் டிஸ்டம்பர் வைரஸ் (Canine Distemper Virus) தான் காரணம் எனறு இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) இன்று அறிவித்தன.

கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் குஜராத் மாநிலத்தின் கிர் வன சரணாலயத்தில் 23 சிங்கங்கள் உயிரிழந்தன. பாதுகாக்கப்பட்ட உயிரினமான சிங்கங்கள் அடுத்தடுத்து உயிர் இழப்பது வன அதிகாரிகளையும் மிருக நல ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியது. சிங்கங்களின் மரணம் எதனால் நடக்கிறது என்பதை கண்டறிய பூனேவில் உள்ள இந்திய தேசிய மருத்துவ கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology) 5 சிங்கங்களின் உடலை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது.

ஆராய்ச்சியின் முடிவில் அந்த 5 சிங்கங்களும் கனைன் டிஸ்டம்பர் வைரஸ் என்ற வைரஸ் தாக்குதலால் உயிரிழந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். நாய், நரி, சிங்கம், புலி, ஓநாய் போன்ற பலவகை விலங்குகளை தாக்கும் இந்த ஆபத்தான வைரசால் கடந்த 1991ம் ஆண்டு கிழக்கு ஆப்பரிக்காவில் 30 சதவீத சிங்கங்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் பற்றிய விவரங்கள் மிக குறைவு. இதற்கு முன் 2016ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சில நாய்களுக்கு இந்த சிடிவி வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

தற்போது கிர் வனப்பகுதியில் பரவி வரும் சிடிவி வைரஸ் நோய் தொற்றில் இருந்து மற்ற சிங்கங் களை காப்பாற்ற உடனடியாக அவற்றை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.மேலும் சிங்கங் களை அழிவில் இருந்து காக்க அமெரிக்காவில் இருந்து 300 சிடிவி வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப் பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

தற்போது கிர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றியுள்ள 36 சிங்கங்கள் வனத்துறையின் கண் காணிப்பில் உள்ளன. அவற்றில் மூன்று சிங்கங்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சிடிவி நோய் தொற்றில் இருந்து சிங்கங்களை காப்பாற்ற மத்திய அரசின் உதவியுடன் சர்வதேச அமைப்புகளின் உதவியையும் குஜராத் அரசு நாடியுள்ளது.