புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்! – AanthaiReporter.Com

புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்!

செப்டம்பர் 13 வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று நமது புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8.00 மணிக்கு சிறப்பு ’’மார்னிங் கஃபே’’ நிகழ்ச்சியில் ஆளப்போறான் தமிழன் பாடல் புகழ் சத்யபிரகாஷ் பங்குபெற்று, தனது இசைப் பயனத்தைப் பற்றியும் இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ,ஆர் ரகுமான் ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்கள் …

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் வளர்ந்துவரும் பிரபல பாடகிகள்லெஷ்மி ஜெயன், லெஷ்மி பிரியா, வசுந்தரா பங்கேற்று பாடுகின்றனர் இவர்களோடு திரைப்பட நடன அமைப்பாளர் ஜாய் மதி குழுவினரின் அட்டகாசமான நடன நிகழ்ச்சியும் உண்டு புதுயுகம் தொகுப்பாளர்கள் அனைவரும் பங்குபெற்று நிகழ்ச்சியை மேலும் கலகலப்பக்கியுள்ளனர்

இன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ’’சீமராஜா’’ திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் பங்குபெறும் சிறப்பு ’’நட்சத்திர ஜன்னல்’’ நிகழ்ச்சியில் படத்தைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களும், நகைச்சுவை நடிகர் சூரியுடன் தொலைப்பேசியில் கலகலப்பாக கலந்துறையாடும் சிறப்பு பகுதிகளுடன் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது…

இயக்குனர் பாரதிராஜா அறிமுகம் செய்து இன்று தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிற்க்கும் எண்ணற்ற நாயகிகள் வரிசையில் தற்போது அவர் இயக்கி நடித்துள்ள ஓம் திரைப்படத்தின் நாயகி தனது முதல் படத்தின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் ’’என் இனிய தமிழ் மக்களே’’ எனும் சிறப்பு நிகழ்ச்சி நமது புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியன்று மாலை 4.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்…