சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் ‘விக்ரம்’ பிரிந்தது! – AanthaiReporter.Com

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் ‘விக்ரம்’ பிரிந்தது!

உலக நாடுகளை பிரமிக்க வைத்திருக்கும் சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக தனியாக பிரிக்கப் பட்டு உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் முக்கிய பாகமான விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டரை தனியாக பிரிப்பதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மிக சவாலானதாக கருதப்பட்ட லேண்டரை சந்திரயான் 2 ல் இருந்தும் பிரிக்கும் பணியை இன்று (செப்.,02) பிற்பகல் 1.16 மணிக்கு மேற்கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரம், செப்.,7 அன்று நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கும்.