விஜய்சேதுபதி & த்ரிஷா நடித்த 96 படம் அக்டோபர் 4ல் ரிலீஸ்! – AanthaiReporter.Com

விஜய்சேதுபதி & த்ரிஷா நடித்த 96 படம் அக்டோபர் 4ல் ரிலீஸ்!

விஜய்சேதுபதி நடித்திருக்கும் `96’படத்தின் ரிலீஸ் தேதியாக அக்டோபர் 4 என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மெட்ராஸ் என்டெர்பிரைசஸின் நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் பிரேம் ஏற்கெனவே `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியவர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கோவிந்த் வசந்த் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்தப் படம் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.