ஜெட்லிகிட்டே சொல்லிட்டுதான் லண்டன் வந்தேன்! – சர்ச்சையை கிளப்பும் மல்லையா! – AanthaiReporter.Com

ஜெட்லிகிட்டே சொல்லிட்டுதான் லண்டன் வந்தேன்! – சர்ச்சையை கிளப்பும் மல்லையா!

வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையா நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து சொல்லி விட்டுதான் கிளம்பினேன் என்று லண்டனில் கூறியதும் அதையடுத்து விஜய் மல்லையா கூறியதில் “உண்மை” இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து மல்லையா “பொய்யை உண்மை போல” கூறியுள்ளார். அதற்காக அவர் கூறுவது “உண்மை ஆகாது” என்றும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், நான் அவரை(விஜய் மல்லையா) சந்திக்கவில்லை. அவர் கூறுவதில் முற்றிலும் உண்மை இல்லை என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இதுக்குறித்து வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜரானா விஜய் மல்லையா.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அபொழுது கூறியதாவது, ஜெனீவாவில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருந்ததால், நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து, வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் எனவும், கடன்களை திரும்ப செலுத்துவதாக கூறி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். இது தான் உண்மை. என் மனசாட்சி தெளிவாக உள்ளது என்று கூறினார்.

இவரின் பேச்சுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அருண் ஜெட்லி – விஜய் மல்லையா சந்திப்பு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் எப்படி இந்தியாவை விட்டு விஜய் மல்லையா வெளியேற அனுமதிக்கப்பட்டார்? என கேட்டுள்ளது காங்கிரஸ்.

இந்நிலையில், “விஜய் மல்லையாவைச் சந்திக்க நான் நேரம் ஒதுக்கவில்லை. அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். எப்போதாவது சபைக்கு வருவார். ஒருமுறை எனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, எனை நோக்கி வந்த அவர் “கடன் தீர்வுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்’ என நடந்தபடியே கூறினார். நான் உடனே “என்னிடம் பேசுவதில் பலன் இல்லை. வங்கிகளை அணுகுங்கள்” எனக் கூறினேன். அவர் கையில் வைத்திருந்த ஆவணங்களை கூடா நான் வங்கி பார்க்கவில்லை. எனவே அவர் கூறுவது முற்றிலும் பொய்” என அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அருண்ஜேட்லியை தாம் முறைப்படி சந்திக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் எதேச்சையாக சந்திக்க நேரிட்டது என்றும் விஜய் மல்லையா விளக்கமளித்துள்ளார். நாட்டிலிருந்து தப்பி ஓட மல்லையா அனுமதிக்கப்பட்டார் என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது, தப்பி ஓடுவதற்கு யாரும் தனக்கு யோசனை கூறவில்லை என மல்லையா தெரிவித்தார்.