‘விஜய் 63’ – பூஜை போட்டாச்சு! – AanthaiReporter.Com

‘விஜய் 63’ – பூஜை போட்டாச்சு!

கோலிவுட்டில் ஹிட் அடித்த தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து உள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய் 63’ என்றழைக்கப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடிக்கவுள்ளார். விஜய் ஜோடி நயன்தாரா கமிட் ஆகியு|ள்ளார், பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த கதிர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இவர்களுடன் ஆனந்த ராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதற்கான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.