சபாஷ் நாயுடு – வேணாம் அப்பூ – கமலுக்கு விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள்!

சபாஷ் நாயுடு – வேணாம் அப்பூ – கமலுக்கு விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள்!

கமலும் ஸ்ருதி ஹாசனும் நடிப்பில் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும்சபாஷ் நாயுடு படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்றது நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் #சபாஷ் நாயுடு படத்தலைப்பு பலத் தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் தேவர் மகன், சண்டியர், விருமாண்டி படங்களால் ஏற்பட்ட சாதிக்கலவரங்களின் வடுக்களே மறையாமல் இருக்கிற சூழலில், மீண்டும் ஜாதீய பெயருள்ள படமா என்று சமூக வலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
kamal may 3

அதே சமயம் சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட போது பதில் அளித்த கமல் “முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு இந்த தலைப்பு பிடித்திருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில் சபாஷ் நாயுடு என்கிற இப்படத் தலைப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும் வானூர் (தனி) தொகுதி வேட்பாளருமான ரவிக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து “தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.

முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும்போது மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.தலைப்பிலோ வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்” என்று கேடுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!