வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’! – AanthaiReporter.Com

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’!

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி.

பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை “கூத்து” என்று அழைத்தனர். ஆடல், நாட்டியம், நாடகம் என்றும் அழைத்தனர். இது பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் “கூத்தர்”. அவர் தம் பெண்பாலார் ” கூத்தியர்” இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர். பரிசாகப் பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர்.இவர்களது வாழ்க்கைப்பற்றி சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

அதேவேளை பரதம் என்ற சொல்,
ப -பாவம்,
ர – ராகம்,
த – தாளம்
என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அழகான பரதக் கலையை திறமை வாய்ந்த நடனக்கலைஞர்கள் ரசிகர்களுக்கு விருந்தாய் நடனத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி தான் இந்த நாட்டியாஞ்சலி.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பிரபலமான நாட்டியக் கலைஞர்கள் அவர்களது மாணவர்களுடன் இந்த நாட்டிய நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர் புஷ்பாஞ்சலி, வர்ணம், பதம் ,தில்லானா , அலாரிப்பு, கௌத்துவம், ஜாவளிஎன பலவிதமான பரிமாணங்களைக் கொண்டது இந்த பரதக்கலை.இவை அனைத்தையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நீங்கள் கண்டு ரசிக்கலாம். வந்திதா மோகன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.