வாகனங்களுக்கு அடுத்தாண்டு முதல் ஹைடெக் நம்பர் பிளேட் ! – AanthaiReporter.Com

வாகனங்களுக்கு அடுத்தாண்டு முதல் ஹைடெக் நம்பர் பிளேட் !

இந்தியாவில் வாகன உற்பத்தி, எரிபொருள் பயன்பாடு, காற்றுமாசு குறைத்தல் போன்ற விஷயங் களில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றாக, 2019 ஜூலை 1ம் தேதிக்கு பிறகு இந்த நம்பர் பிளேட்டை தயாரிப்பாளரிடமே பெறுவது என்பது தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்டு இருக்கும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டிலுள்ள வாகனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் இருக்கும் சில விதிமுறைகள், லைசென்ஸ், ஆர்.சி.புத்தகம், சாதாரண நம்பர் பிளேட்டுகள் போன்றவற்றில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி பல தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர். விபத்து ஏற்பட்டாலோ, வாகனங்கள் காணாமல் போனாலோ அந்த வாகனங்கள் மூலம் உரிமையாளரின் எந்த விபரத்தையும் அறிந்து கொள்ள முடியாமலிருக்கிறது,

இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட். ஒருமுறை பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை அகற்றவோ, கழற்றி வேறு வாகனத்தில் பொருத்தவோ முடியாது. அப்படி முறைகேடு செய்ய முயற்சித்தால், அந்த நம்பர் பிளேட் தானாக அழிந்துவிடும் வகையில், அதில் ‘ஸ்நாப் லாக்’ தொழில்நுட்ப வசதி செய்யப்பட்ட. நம்பர் பிளேட்களை கார்களில் பொருத்த மத்திய அரசு முடிவு செய்து இதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடந்தன. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து அடுத்தாண்டு ஜனவரியிலிருந்து விற்பனைக்கு வரும் கார்களில் உயர் பாதுகாப்பு நம்பர்பிளேட் பொருத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நம்பர் பிளேட்களில் உள்ள விவரங்களை சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்தே காண முடியும். அதற்கேற்றவாறு இதில் குரோமியம் ஹாலோ கிராம் ஸ்டிக்கர் தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட்டு இருக்கும். நம்பர் பிளேட்டில் உள்ள ‘ரெட்ரோ ரிஃப்ளக்டிவ்’ ஸ்டிக்கரில் ‘இந்தியா’ என்று 45 டிகிரியில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். அத்துடன் இடது ஓரத்தில் நீல நிறத்தில் ஐ.என்.டி என்ற எழுத்துகள் அச்சிடப்பட்டு இருக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ளன.  அந்தந்த மாநில அரசுகளே இவற்றை வாங்கி, வாகனப் பதிவின்போது பொருத்தி வந்தன. இனிமேல் கார் தயாரிப்பு நிறுவனங்களாலேயே ஹைசெக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த புதிய நம்பர் பிளேட் விலை கார் விலையுடன் சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பழைய கார்களுக்கான உயர் பாதுகாப்பு பலகையை, அந்தந்த கார் விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காரின் இன்ஜின் எண், சேிஸ் எண் போன்ற விபரங்களும் அதில் இருக்கும். கார் திருட்டு சம்பவங்களின் போது, இவை பெரும் உதவியாக இருக்கும் என்பதால். மத்திய மோட்டார் வாகன சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.