பல்வேறு வங்கிகளில் பல்வேறு பணி வாய்ப்புகள்! – AanthaiReporter.Com

பல்வேறு வங்கிகளில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

நாட்டின் அரசுத் துறையில் உள்ள வங்கிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை தேர்வு செய்து கொடுக்கும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பானது அவற்றில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது.

பணிகளின் பெயர் காலியிடங்கள்:

ஐ.டி. அதிகாரி – 219 விவசாய கள அதிகாரி – 853  இந்தி அதிகாரி – 69 சட்ட அதிகாரி – 75 மனித வள அதிகாரி – 81 மார்க்கெட்டிங் அதிகாரி – 302

தகுதிகள்:

சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள இன்ஜினியரிங் அல்லது பிற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். *இது குறித்த முழு விபரங்களை இணைய தளத்தில் பார்த்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.*முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப் படுவர். *இவை இரண்டிலும் தகுதி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் படுவர். *பொதுவாக ஆங்கிலம், ரீசனிங், கணிதத் திறன் இவற்றில் முதல் கட்டத் தேர்வு நடத்தப்படும். *முதன்மைத் தேர்வான அடுத்த கட்டத் தேர்வில் சிறப்புப் பணியிடங்களுக்கான உங்கள் தகுதி தரும் பாடத்தில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணபிக்க வேண்டிய முறை:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

*6.11.18 முதல் 26.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய இணையதள முகவரி:

ஆந்தை வேலைவாய்ப்பு