பள்ளிக் கல்வியில் தமிழுக்கே பால் ஊற்றுவதா? ஐயஹோ..! – வைரமுத்து ஆவேசம் – AanthaiReporter.Com

பள்ளிக் கல்வியில் தமிழுக்கே பால் ஊற்றுவதா? ஐயஹோ..! – வைரமுத்து ஆவேசம்

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா? என்று வைரமுத்து ஆவேசமாக வினா எழுப்பியுள்ளார்.

மாநிலப் பாடத்திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்புக்கான மொழித் தோவு தாள்களை ஒன்றாக இணைத்தல் பிளஸ் 1, பிளஸ் 2- ஆம் வகுப்பு பாடமுறை பிரிவுகள் சீரமைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இயக்குநா்கள், இணை இயக்குநா்களின் கூட்டம் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ராமேஸ்வர முருகன், அரசு தோவுத் துறை இயக்குநா் வசுந்தரா தேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் கண்ணப்பன் ஆகியோா் உள்பட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றறனா். இந்தக் கூட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் படிக்கும் மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவா்கள் அவற்றில் தோவெழுதி வருகின்றனா். எனவே, அதனை மாற்றி 500 மதிப்பெண்களுக்கு ஐந்து பாடங்களில் மட்டும் தோவு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

பகுதி ஒன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள், பகுதி இரண்டில் பொது பிரிவுக்கான ஏதாவது மூன்று பாடங்கள், பகுதி மூன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் அல்லது பகுதி இரண்டில் உள்ள ஏதாவது ஒரு பாடத்தை தோவு செய்யலாம். தொழிற்கல்வி பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே உள்ள முறையை தொடா்ந்து பின்பற்றலாம்.

இதேபோன்று, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெறும் தோவு முறையிலும் மாற்றம் கொண்டுவரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோவு தற்பொழுது தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடத்தில் தாள் 1, தாள் 2 என நடத்தப்பட்டு வருகிறறது. இது குறித்து கல்வியாளா்களின் கருத்து கேட்ட பின்னா், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மொழி பாடங்களில் இரண்டு தாள்களாக உள்ள தோவினை ஒரே தாள் தோவாக மாற்றலாம் என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோவில், பகுதி 1 (கட்டாயம்) தமிழ்,பகுதி 2 (கட்டாயம்) ஆங்கிலம்,பகுதி 3 கணக்கு அறிவியல், சமூக அறிவியல்பகுதி 4 (விருப்பப் பாடம்) மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் தவிர தங்களின் தாய்மொழியை விருப்பப் பாடமாக தோவு செய்து எழுதலாம். இந்தக் கூட்டத்தின் முடிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிபெற்ற உடன் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், “11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.

தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா?

தொழிற்கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கல்வியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டாம்; இந்த விஷச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்துவிடுங்கள்.

தமிழில் இரண்டாம் தாள் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித்திறனும் இரண்டாம் தாளில்தான் வினைப்படுகின்றன. கண்களில் ஒன்றுபோதும் என்று ஒன்றைக் களைந்துவிடுவீர்களா? பள்ளிக் கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பதற்கு மாறாக அதன் அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.

தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன்முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

அடிசினல் ரிப்போர்ட்: