விஜயா வங்கியில் மேனேஜர் ரேஞ்சிலான ஜாப் தயார்! – AanthaiReporter.Com

விஜயா வங்கியில் மேனேஜர் ரேஞ்சிலான ஜாப் தயார்!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கிக்கு நாடு முழுவதும், சுமார் 2031 கிளைகள் உள்ளன. இதன் தலைமையகம் பெங்களூரூ. இவ்வங்கியில் மேலாளர் பிரிவிலான சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் காலியாக உள்ள 32 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 2018 மார்ச் 1 அடிப்படையில் சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் இறுதித் தேர்வை முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் சார்டர்டு அக்கவுண்டன்டாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு வங்கியில் பணியாற்றிய அனுபவம், கிரெடிட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவில் துறை சார்ந்த அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப் பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஏப். 27.

விபரங்களுக்கு : ஆந்தை ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு