எச் 1 பி விசா ஊழியர் மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய தடை?

எச் 1 பி விசா ஊழியர் மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய தடை?

வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிப்புரிய வழங்கப்படும் எச்1பி விசா நடைமுறைகளில் அதிபர் டிரம்ப் பல திருத்தங்களை செய்து வருகிறார். எச்1பி விசா மூலம் அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த திருத்தங்களால் எச்1பி விசாவை அதிகளவில் பயன்படுத்திவரும் இந்தியாவில் பலர் பாதிக்கப்படுவார்கள் என சர்ச்சை எழுந்தது. 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒபாமாவின் திட்டத்தின் கீழ் எச்1பி விசா பணியாளர்களின் மனைவிகளுக்கு வழங்கப்படும் எச்4 விசாவின் மூலம் அமெரிக்காவில் பணி புரியலாம்.

அதன் அடிப்படையில் 2016ம் ஆண்டு எச்4 விசா வைத்திருந்த சுமார் 41,000 பேருக்கு வேலை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டில் ஜூன் மாதம் வரை அந்த எண்ணிக்கை 36,000 மாக உள்ளது. இந்த சூழலில் எச்4 விசா முறையை ரத்துச்செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலிப்பதாக  வெளியாகியுள்ள அறிவிப்பு இந்தியர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை அளிக்கலாம்.

இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டால் வெளிநாட்டு பணியாளர்களின் மனைவிகள் வேறு வகையில் பணி செய்வதற்கான அங்கீகாரம் பெற முடியும். ஆனால் திறமை வாய்ந்த வெளிநாட்டு குடியேறிகளின் நம்பிக்கையை அரசின் உத்தேச முடிவு குலைத்துவிடும் என சிஎன்என் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!