அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கும் வரம்பு நீக்கம்! – AanthaiReporter.Com

அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கும் வரம்பு நீக்கம்!

பொதுவாக,

இந்திய பிரஜை எனப்படும் இண்டியன் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 30 முதல் 40நாடுகள் வரை தான் பயணம் விசா இல்லாமல் போய் வர முடியும்.

இதுவே ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா பிரஜை என்றால் ஏறக்குறை 150 நாடுகள் எந்த விசா பிரச்சனையும் இல்லாமல் போய் வர முடியும்.

அதிலும் ஒரு அமெரிக்க குடிமகன் என்றால் உலக அளவில் நமக்குகு சட்ட பாதுகாப்பை வலுவாக அந்த நாட்டு அரசாங்கம் தரும் என்பதால் அமெரிக்க குடியுரிமை வாங்க பலரு விரும்புகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு விண்ணப்பங் களில் ஒவ்வொரு நாட்டுக்கு 7 சதவீத விண்ணப்பங்கள் தான் ஏற்கப்படும் என்ற வரம்பை ரத்து செய்யும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சட்டமாக அமல்படுத்தப்பட்டால் இந்தியர்களுக்கு சாதகமாக அமையும்.

அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படும் கிரீன் கார்டுக்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கிறார்கள். அமெரிக்க சட்டப்படி கிரீன் கார்ட் விண்ணப்பங்கள் நாடுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 7 சதவீதம் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

இதன் காரணமாக அமெரிக்க குடியுரிமை பெற பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டினர் 10 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை பெற காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 7 சதவீத விண்ணப்பங்கள் என்ற வரம்பை நீக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

உயர் திறமை பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு நீதி வழங்கும் சட்டம் 2019 (Fairness for High-Skilled Immigrants Act of 2019) என்ற இந்த மசோதாவின்படி அமெரிக்காவில் குடியேற விரும்புவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை 7 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தபடும். மேலும் வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான 7 சதவீத வரம்பு நீக்கப்படும்.

மொத்தம் 435 உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதாவிற்கு ஆதரவாக 365 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவானது. இந்த மசோதா அடுத்ததாக செனட் சபை யிலும் நிறைவேற்றப்பட வேண்டும். செனட் சபையில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டால் சட்ட மாக அமல்படுத்தப்படும். அவ்வாறு நடந்தால் பல ஆண்டுகலாக கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்கள் விரைவில் குடியுரிமை பெறுவார்கள்.

அமெரிக்காவில் உள்ள பிரபலமான இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டதை வரவேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.