உரு – திரை விமர்சனம்!

உரு – திரை விமர்சனம்!

நம் தமிழ் சினிமா எத்தனையோ வகை கதைகளையும், களங்களையும், போக்கையும் கண்டு கொண்டுதான் இருக்கிறது. வாரத்தில் மினிமம் இரண்டு தொடங்கி ஏழு படங்கள் வெளியானாலும் மனதில் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் நிறைவு தரும் படங்கள் அரிதாகவே இருக்கின்றன். அந்த வகையில் உரு திரைப்படம் பாஸ் மார்க் வாங்கி உள்ளது.

அவுட் ஆஃஃப் ஆர்டரா கி போன எழுத்தாளர் என்று பேரெடுத்து விட்ட ஹீரோ கலையரசன். இந்த காதல், கத்திரிக்கா ,செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை சொல்கிறார்கள். அதே சமயம் மனைவி தன்ஷிகா இப்படி கதை எழுதுவதையே விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்த்தால்தான் நல்லது கலையிடம் நச்சரித்து வருகிறார்.

ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் “பயம்” என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார். அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான். அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப் படம் HUSH என்ற ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் தான் எடுத்தது என்பதை பக்கத்து சீட் பக்கி சத்தம் போட்டு சொன்னது. ஆனால் அதையெல்லாம் மூடி மறைக்காமல் படத்தில் ஒரு சில காட்சிகளில் தொலைக்காட்சி யில் அதே ஹாலிவுட் படம் ஓடுவது போல் காட்டிய விக்கி ஆனந்த் புத்திசாலித்தனத்துக்கு சல்யூட். பட ஹீரோ மேகமலை போன நொடியிலிருந்து ஆடியன்ஸை சீட் நுனிக்கு வர வைத்து அறிமுக இயக்குநர் அடுத்தடுத்து ட்விஸ்ட் வைத்து கொஞ்சம் தெளிவின்மையை ஏற்படுத்தி விட்டார்.

எய்தவன் ஹிட்டுக்கு பிறகு தோன்றும் கலையரசனுக்கு. ஓயாமல் புகைத்துக் கொண்டு, கற்பனை செய்து கொண்டே இருப்பது வெறுப்பில் பேனா நிப்பை உடைப்பது என சைக்கோ எழுத்தாளரை வெளிப்படுத்தி சபாஷ் சொல்ல வைக்கிறார். ஆனால் இந்த கலையரசனை படு கேஷூவலாக டம்மியாக்கி விடுகிறார் தன்ஷிகா. கதையப்படி. இண்டர்வெல்லுக்கு பிறகு முழுக்கதையை நகர்த்தியபடி பின்னி பெடலடித்து இருக்கிறார் பிலிம்பேர் அவார்ட் லேடி. அடிக்கடி அங்கிருந்து தப்ப நினைத்து வீட்டிலிருந்து வெளியே ஓடுவது, ஆனால் அடுத்த நிமிடமே மரணபயம் வந்து வீட்டுக்கே மருபடியும் திரும்புவது என பார்வையாளர்களை பத பதைக்க வைக்கிறார் தன்ஷிகா.

பின்னணி இசையை பொறுத்த வரை ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. காடுகளில் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மெனக்கிட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

மொத்தத்தில் இந்த உரு வழக்கமான திகில் ஹாரர் படங்களை உடனடியாக நினைவுப்படுத்தாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருக்கும் புது முக இயக்குநருக்கு கண்டிப்பாக சபாஷ் சொல்லலாம்.

error: Content is protected !!