அரைகுறை ஆடையுடன் வீடியோ & போட்டோ வெளியிடுவது குற்றம்! – இங்கிலாந்து அதிரடி! – AanthaiReporter.Com

அரைகுறை ஆடையுடன் வீடியோ & போட்டோ வெளியிடுவது குற்றம்! – இங்கிலாந்து அதிரடி!

ஆடையும் ஆளுமையும் ஒருவரின் ஆடைதான் இன்று அவரின் முதல் அடையாளம் என்று நம் மூளை மடிப்பில் பதிந்து வைத்து விட்டோம். நிறத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆடை அணிந்தால் காமன்சென்ஸ் இல்லாதவர். கவர்ச்சி ஆடை அணிந்தால் காமம் கூடியவர்கள். அரைகுறை ஆடை அணிந்தால் கலாச்சார கேடு… இப்படி நாம் யார் என்று முத்திரை குத்தி விடும். இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவது கிரிமினல் குற்றத்தில் அடக்கும் என இங்கிலாந்து அரசு அதிரடி சட்டம் உருவாக்கி உள்ளது! குறிப்பாக அரைகால் சட்டை, கவர்ச்சியான ஆடைகளை அணிந்து இணையத்தில் வீடியோக்களை வெளியிடுவோர் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. உலகளவில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் தனி மனிதர் மீதான பாலியல் குற்றங்களை கருத்தில் கொண்டு இந்த புது சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

பல நூறு ஆண்டிற்கு முன்பு வெயில் பிரதேசத்தில் இருக்கும் ஆணுக்கு அதிகமாய் செக்ஸ் உணர்வு கள் இருப்பதால், அவர்கள் பெண்களுடன் அதிகப்படியான உடலுறவு வைத்துகொண்டனர். எந்தவித கர்ப்பத்தடை முறைகளும் இல்லாத காலக்கட்டத்தில் ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டப்படா மல்  இருக்க பெண்கள் தங்களை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் ஆடைகளை அணிவிக்கப்பட்டனர். ஆனால் இன்று ஆணும் பெண்ணும் சரிசமம் என்றும் நின்று பேசக் கூட நேரம் இல்லாத அவசர உலகிலும் நாம் அந்த ஆடையைப் புகுத்தி கட்டுப்பாடாய் கடைபிடிக்கிறோம். ஷாட்ஸ் போட்ட அண்ணண், சட்டை போடாத அப்பா, முண்டா பனியன் மட்டுமே அணியும் காய்கறிகாரர் என ஆண்களை இப்படி அரைகுறை ஆடையில், பிறந்தது முதல் பார்த்துப் பழகிய பெண்கள், இதனால் தங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப ஆடை அணிந்த ஆண்களைப் பார்த்தவுடன் உணர்வு தூண்டப்படுவதில்லை. ஆனால், எப்பொழுது விலகும் என காத்திருந்து மெலிதாய் விலகும் மாராப்பை பார்த்தே மனதுக்குள் அந்தப் பெண்ணுடன் ஒரு சில்மிஷம் கொண்டு சொர்க்கம் காண்கின்றனர் ஆண்கள் பலர். இதனிடையே இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டம் New law, Voyeurism (Offences) Act 2019-ன் படி அரைகால் சட்டை அணியும் பெண்கள், பெண்களின் அந்தரங்க பாகங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தும் விதமான வீடியோக்களை பதிவோரும், பரிவோருக்கு உதவி செய்வோரும் கிரிமினல் குற்றவாலிகளாக கருதப்படுவர். எடுக்கப்படும் வீடியோவில் இடம்பெறும் பெண்களின் சம்பந்தம் இல்லாமல் வீடியோ பதியப்படும் பட்சத்தில் வீடியோ எடுக்கும் நபரின் மீதி சட்டம் பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு சமூக போராளி ஜின்னா மார்டின் இணையத்தில் அரை நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு எதிராக ‘Care2’ என்னு பிரச்சாரத்தை நடத்தி வந்தார். இணையத்தில் பகிரப்படும் அரைகுறை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என அவர் தனது பிரச்சாரத்தில் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது இவரது பிரச்சாரத்திற்கு பயன் அளிக்கும் வகையில் அந்நாட்டில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

— இந்த New law, Voyeurism (Offences) Act 2019 பற்றி சில தகவல்கள் —

ஒரு தனி மனிதரின் அனுமதி இன்றி அவரது ஆடைகளை குறிவைத்தோ, அவரது அந்தரங்க உறுப்புகளை குறிவைத்தோ புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தல் கிரிமினல் குற்றத்தில் அடங்கும்.

பாலியல் ரீதியா தூண்டும் வகையில் சைகளை செய்தல், மற்ற வகையில் நடந்துக்கொள்ளுதல், அல்லது நேரடியாக தெரியப்படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் மீதும் இச்சட்டம் பாயும், என இங்கிலாந்து நீதிவான் சங்கம் தெரிவித்துள்ளது.