பாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் கவலைக்கிடம் : ஐ.நா. அறிக்கை – AanthaiReporter.Com

பாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் கவலைக்கிடம் : ஐ.நா. அறிக்கை

தீவிரவாதிகள் கூடாரம் என்று சில நாடுகளால் ஓப்பனாகச் சுட்டக்கப்படும் பாகிஸ்தானில் பயங்கர வாதம் அதிகரிப்பு மற்றும் மத சகிப்புத்தன்மையின்மை அதிகரிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், அகமதிஸ் மற்றும் இந்துக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். பாகிஸ் தானில் இஸ்லாமிய அமைப்புகளால் சிறுபான்மையினர் மதரீதியிலான தாக்குதல்களை எதிர்க்கொண்டு வருகிறார்கள். இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடு இதயத்தை நொறுக்கும் விதமாக காணப்படுகிறது. அகமதியா சமூதாயம் பாகிஸ்தானில் வெளிப்படையாகவே கொலைமிரட்டலை எதிர்க்கொண்டு வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் அகமதியா சமூதாயம் பாகிஸ்தானில் உள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் காரணமாக அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளதால் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறு கிறார்கள், பிற நாடுகளில் தஞ்சம் கோருகிறார்கள். பாகிஸ்தானில் இந்துக்களின் நிலையும் இதேபோன்றுதான். அவர்களும் வெளிநாடுகளில்தான் தஞ்சம் கோருகிறார்கள். இந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் ஒன்றுதான் என்பதெல்லாம் ஏற்கெனவே வெளியான தகவல்களதான். இந்நிலையில் ஐ.நா. ஆணயம் அறிக்கை… பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியில், மத சுதந்திரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐ.நா. ஆணையம் (United Nations’ Commission on the Status of Women) தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் தேசிய சிறுபான்மையினர் தினம் கடை பிடிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த போது அதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசிய போது,  ”பாகிஸ்தானில் உள்ள சிறு பான்மையினர் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் மதவிழாக்களை, பண்டிகை களை எந்தவிதமான இடையூறும் இன்றி கொண்டாடி மகிழவும் அவர்களுக்குள்ள உரிமை பாதுகாக்கப்படும்,

இறைத்தூதர் முகமது நபி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய மத சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்களின் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்டன. ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்தோ அல்லது வேறு சிறுபான்மையினரைத் திருமணம் செய்தோ, முஸ்லிம் மதத்துக்கு எப்படி நாம் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியும். அல்லது துப்பாக்கி முனையில் மிரட்டி மதமாற்றம் செய்ய முடியுமா?

இந்தச் செயல் அனைத்தும் முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது. இறைவுன் அனுப்பிய இறைத் தூதர்களிடம், யார்மீதும் நம்பிக்கைகளை கட்டாயப்படுத்தி திணிக்கக் கூறவில்லை. அதன்படிதான் இறைத்தூதர்கள் நடந்தார்கள். இறைத்தூதர்களின் பணி கடவுளின் வார்த்தைகளைப் பரப்புவது மட்டுமே. பாகிஸ்தானை மதினாவின் மாதிரியாக மாற்றுவேன். அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடக்கும். அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படும். ” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்ற தலைப்பில் 47 பக்க அறிக்கையை ஐ.நா. ஆணையம் தயாரித்துள்ளது. அதில் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துகளின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும், குறிப்பாக, அந்த மதங்களை சேர்ந்த பெண்கள், சிறுமிகளின் நிலை மோசமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நூற்றுக்கான இளம்பெண்களும், சிறுமிகளும் கடத்திச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, முஸ்லிம் ஆடவருக்கு கட்டாய திருமணம் செய்துவைக்கப்படுவதாகவும் ஐ.நா. ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.