தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகள் :ஐ.நா. முடிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகள் :ஐ.நா. முடிவு

நம்மில் பெரும்பாலானோர் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்றதற்காக தான் தீபாவளி கொண் டாடப் படுகிறது என்றுதான் அறிவோம். ஆனால், வட இந்தியா, சீக்கியர்கள், சமணர்கள், போன்ற வர்கள் வேறு சில நிகழ்வுகள் மற்றும் புராணக் கதைகளை காரணம் கொண்டு தீபாவளியை கொண்டாடுகிறார்கள்… அதாவது வனவாசம் முடிந்து வருவதல் இராமன் வனவாசம் சென்று பதினான்கு வருடங்கள் கழித்து நாடு திரும்பிய போது மக்கள் அனைவரும் விளக்கேற்றி வர வேற்றனர். வட இந்திய மக்கள் இதன் காரணமாக தான் தீபாவளி கொண்டாடுவதாய் கூற்றுகள் இருக்கின்றன. அது போல் வராக அவதாரம் புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனுக்கு இரு மனைவியர். இதில் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருஷ்ணன் வராக (பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்த நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று ஒரு வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைத்தான். இதுவும் தீபாவளிக்கு பின்னணில் இருக்கும் ஓர் புராண கதையாகும்.

மேலும் நரகாசுரன் பலி கிருஷ்ணர், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டான், அந்த வரமே தீபாவளி திருநாளாக கொண்டா டப்படுகின்றது என்ரும் சொல்வர். அது மட்டுமின்றி இராமாயண இதிகாசம் இராமாயண இதி காசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, மனைவி சீதை மற்றும் சகோதரன் இலட்சும ணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை தான் தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது. இப்படி பலவித காரணங்கள் சொல்லியபடி பல தரப்பினராலும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் சிறப்பு தபால் தலைகளை வெளியிட ஐக்கிய நாடுகளின் தபால் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

ஆம்..இந்திய நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு, வரும் அக்டோபர் 19 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் தபால் நிர்வாகம் சிறப்பு தபால் தலைகளை அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்துஜ் ஐநா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,”மகிழ்ச்சியான மற்றும் ஒளிக்கான மிகப்பிரபலமான தீபாவளி பண்டிகையை இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் கொண்டாடு கிறார்கள். 1.15 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 10 சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். அதில் ஒளி விலக்குகள், மற்றும் அந்த பண்டிகையின் சிறப்பம்சங்கள் இடம்பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,”இந்த தபால் தலைகளை உள்ளடக்கிய தாளின் பின்புறம் ஐக்கிய நாடுகளின் தலைமையக கட்டிடம் இடம்பெற்றிருக்கும். அதில் தீபாவளி வாழ்த்துக்கள் என்னும் வாசகம் பொறிக்கப் பட்டிருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தபால்கள் வெளியீட்டை ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய நிரந்தர தூதர் சையத் அக்பருதீன் வரவேற்றுள்ளார்.கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க தபால் சேவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!