டிடிவி. தினகரனின் அமமுக வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்! – AanthaiReporter.Com

டிடிவி. தினகரனின் அமமுக வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்!

தமிழக அரசியலில் தனி ஒருவராக வலம் வந்து தனிக் கவனம் பெற்று வரும் டிடிவி தினகரன் தன் அமமுக சார்பில் 24 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.

நம்ம தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற  தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.   திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

இந்தநிலையில், டிடிவி தினகரனின் அம்மா  மக்கள் முன்னேற்ற கழகம் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட உள்ளது. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு வந்த அமமுகவிற்கு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே அமமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது.

இதனால், அமமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிடுவதா, வேண்டாமா என்ற நிலைக்கு வந்தது. இருப்பினும், கட்சி ஆரம்பித்து முதல் தேர்தல் என்பதால் வேறு வழியின்றி வேட்பாளரை  நிறுத்த வேண்டும் என்று கட்சியினரை அமமுக தலைமை வற்புறுத்தியது.

அதன்பேரில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அக்கட்சி முடிவு செய்தது.   எஸ். டி. பி. ஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவை  தேர்தலுடன், இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த தகுதி நீக்க எம். எல். ஏக்கள் சிலர்  திடீரென இடைத்தேர்தலை சந்திக்க போவதாக டிடிவி. தினகரனிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் டிடிவி. தினகரனுக்கு குழப்பம் ஏற்பட்டது.

கடந்த திங்கள் கிழமை வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த குழப்பத்தால் பட்டியல் வெளியிடுவது தள்ளிப்போனது. கடந்த 2 நாட்களாக வேட்பாளர்  பட்டியலை இறுதி செய்வதில் தீவிரம் காட்டப்பட்டது.

இந்தநிலையில் இறுதி செய்யப்பட்ட 24 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 9 சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி. தினகரன் இன்று வெளியிட்டார். அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில்  திருவள்ளூர் -பொன். ராஜா, தென் சென்னை-இசக்கி சுப்பையா, பெரும்புதூர் – தாம்பரம் நாராயணன், காஞ்சிபுரம் – முனுசாமி, விழுப்புரம்- வானூர் என்  கணபதி, நாமக்கல்-சாமிநாதன்,  ஈரோடு – செந்தில் குமார், நெல்லை – ஞான அருள் மணி, கரூர் – என். தங்கவேல், திருச்சி – சாருபாலா  தொண்டைமான், பெரம்பலூர்- எம்.

ராஜசேகரன், சிதம்பரம்- இளவரசன், மயிலாடுதுறை- செந்தமிழன், நாகப்பட்டினம்- செங்கொடி, தஞ்சாவூர் –  முருகேசன், சிவகங்கை- தேர்போகி வி பாண்டி, மதுரை- டேவிட் அண்ணாதுரை, ராமநாதபுரம்- ஆனந்த், தென்காசி – பொன்னுதாய், நீலகிரி – ராமசாமி,   திருப்பூர்- செல்வம், கோவை – அப்பாதுரை, பொள்ளாச்சி – முத்துக்குமார் ஆகிய 24 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், தென்சென்னையில் போட்டியிடும் இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர் ஆவார்.   இவரது சொந்த ஊர் தென்காசியை அடுத்த ஆயிரப்பேரி  கிராமம்.   எம். எல்.

படித்துள்ளார். இவரது தந்தை இசக்கி, தொடக்க காலத்தில்  பொதுப்பணித்துறையில் வேலை செய்தார்.

பின்னர் சென்னையில்  கான்ட்ராக்ட்  எடுத்து தொழில் செய்து வந்தார். கடந்த 2010ல்  அதிமுகவில் சேர்ந்த இசக்கி சுப்பையாவுக்கு மாவட்ட ஜெ.

பேரவை செயலாளர்   பொறுப்பு வழங்கப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம்  தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெ.   அமைச்சரவையில்  சட்டத்துறை அமைச்சரானார். குறுகிய காலத்திலேயே அமைச்சர் பதவியை இழந்தார்.

தென்காசி  ஆயிரப்பேரி பிறந்த ஊராக  இருந்தாலும், தென்காசியில் கல்வி நிலையங்கள்,  குற்றாலத்தில் ரீசார்ட்கள் நடத்தி வருகிறார். சென்னையிலும் இவருக்கு  வீடுகள் உள்ளன.   சென்னையிலும் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் மகளை இசக்கி சுப்பையாவின் மகன் திருமணம் செய்துள்ளார்.

அதிமுக  இரு அணிகளாக  பிளவுபட்ட போது சசிகலா அணியில் இருந்தார். பின்னர் டிடிவி  தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியதும் அக்கட்சியில்   இணைந்தார்.

அதன் முன்னணி நிர்வாகியாக இருந்து வருகிறார். தகுதி நீக்கம்  செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சில நாட்கள் குற்றாலத்தில் இவருக்கு  சொந்தமான  விடுதிகளில் தான் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மதுரை தொகுதியில் போட்டியிடும் டேவிட் அண்ணா துரை  முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் ஆவார்.

இவரை, திருப்பரங்குன்றம் வேட்பாளராக நிறுத்த அமமுக ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில்,  தற்போது அவர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டசபை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் பூந்தமல்லி – ஏழுமலை, பெரம்பூர் – வெற்றிவேல், திருப்போரூர் – கோதண்டபாணி,  குடியாத்தம் (தனி) – ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் – பாலசுப்பிரமணி, அரூர் (தனி) – முருகன், மானாமதுரை (தனி) – மாரியப்பன் கென்னடி, சாத்தூர் –  சுப்ரமணியன், பரமக்குடி (தனி) – முத்தையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள், அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்  ஆவார்கள். அவர்கள் போட்டியிட விரும்பியதால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சிலர் போட்டியிட  விருப்பம் தெரிவிக்காததால், அடுத்த பட்டியலில் புதிய வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இரண்டாவது கட்ட வேட்பாளர்  பட்டியல் நாளையோ அல்லது நாளை மறுநாளோ வெளியிடப்படும் என்று அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.