வாயை மூடி பேசவும்! – மதுரை ஆதீதனத்துக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை! – AanthaiReporter.Com

வாயை மூடி பேசவும்! – மதுரை ஆதீதனத்துக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை!

அந்த அதிமுக-வோடு நாங்க இணையப் போறோம்-முன்னு  தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வந்தால், மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவுடன் அமமுக இணைவது உறுதி என்றும், இரு கட்சிகளும்  இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மதுரை ஆதினம் தெரிவித்து வருகிறார். யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.