அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்? – அதிபர் டிரம்ப் முடிவு!

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்? – அதிபர் டிரம்ப் முடிவு!

அடம் பிடிப்பதற்கு பேர் போன அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக அவசர நிலை பிரகடனத்தில் கையெழுத்திட இருக்கிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டரஸ் கூறும்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் முன்பு கூறியது போல எல்லைச் சுவர் எழுப்புவதற்கு தேவைப்படு வதற்கான மசோதாவில் கையெழுத்திடவுள்ளார். இந்த சுவரின் மூலம் நமது நாடு பாதுகாக்கப்படும் என்று நமது அதிபர் மீண்டு உறுதியளித்துள்ளார் என்றார்.

தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருகின்ற னர்.  இதைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், இதற்கு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, நிதியாண்டுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறமுடியாமல் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது. ஆனால், சுவர் எழுப்ப நிதிஒதுக்க ஒப்புதல் தர முடியாது என்று ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை தொடர்ந்து மறுத்துவருகிறது

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செனட் குடியரசுக் கட்சிக்குழுத் தலவர் மிட்ச் மெக்கோ னெல் மூத்த உறுப்பினர் மெக்கோனெல், “நான் அதிபர் டிரம்ப்பை சந்தித்தேன். அவருடன் பேசும் பொழுது நான் அறிந்த விஷயங்கள் முக்கியமானவை எல்லா உறுப்பினர்களுக்கும் அவற்றைச் தெரிவிக்கிறேன்.டிரம்ப் சுவர் எழுப்பவதற்கு நிதியை பெறுவதற்கான மசோதாவில் கையெழுத்திட இருக்கிறார் இதனைத் தொடர்ந்து அவர் அவசர நிலையை பிரகடனப்படுத்த இருக்கிறார். . நான் டிரம்பின் முடிவுக்கு ஆதரவு அளிக்கிறேன்” என்றார்.

ஆனால் டிரம்பின் இந்த முடிவை ஜன நாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது சட்டத்துக்கு முரணனாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்

Related Posts

error: Content is protected !!