‘மேட் இன் அமெரிக்கா’ அங்கீகாரம் வாங்க ட்ரம்ப் போட்டபுது கெடுபிடி! – AanthaiReporter.Com

‘மேட் இன் அமெரிக்கா’ அங்கீகாரம் வாங்க ட்ரம்ப் போட்டபுது கெடுபிடி!

பல்வேறு நாடுகளை நம்பியே ஆட்சியை நடத்தும் அமெரிக்காவின் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட் ளுக்கான தரத்தை உயர்த்திய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கான ஆணையில் திங்கட் கிழமை கையெழுத்திட்டார். அதன்படி 75 சதவீதம் உள்நாட்டு பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தான் மேட் இன் அமெரிக்கா (Made in America) என்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அமெரிக்காவில் 50 சதவீதம் உள்நாட்டு பொருட்களாலும் மீதி 50 சதவீதம் வெளிநாட்டு பொருட்களாலும் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மேட் இன் அமெரிக்கா (அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது) என்ற அங்கீகாரம் கிடைத்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்திபொருள்களுக்கு சட்ட பூரவமான அங்கீகாரத்தை வலுப்படுத்தவும் அமெரிக்கப் பொருட்களின் தேவையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டிரம்ப் நிர்வாகம் புதிய ஆணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களில் 75 சதவீதம் உள்நாட்டு பொருட் களை பயன்படுத்தியிருந்தால் தான் அவற்றிக்கு மேட் இன் அமெரிக்கா என்ற அங்கீகாரம் இனி வழங்கப்படும். அதுவே இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்களாக இருந்தால் 95 சதவீதம் உள்ளூர் பொருட்கள் இருக்க வேண்டும். இந்த புதிய தரத்தை அமல்படுத்தும் ஆணையில் அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை கைழுத்திட்டார்.

அரசாணையில் கையெழுத்திட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன்பு பேசுகையில், “தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களில் 50 சதவீதம் வெளிநாட்டு பொருட்கள் இருந்தாலும் அவை மேட் இன் அமெரிக்கா என்ற அங்கீகாரம் பெரும். இந்நிலையில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களின் அமெரிக்கப் பொருள்களின் பங்கு அளவினை உயர்த்தும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட போவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

எனது நிர்வாகத்தின் தத்துவம் மிகவும் எளிமையானது. ஒரு பொருளை அமெரிக்காவில் தயாரிக்கவோ, வளர்க்கவோ, உற்பத்தி செய்யவோ முடியும் என்றால் அதை நாம் செய்ய வேண்டும் என்பதுதான்.

உள்நாட்டு மூலபொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நாம் வாங்குவதற்காக தேர்ந்தெடுக்கும் போது நமது சமூகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. நமது குழந்தைகள் சிறந்த எதிர்காலத்தை நினைத்து கனவு காண முடியும். குடிமக்களாக நம்மை இணைக்கும் நமது விசுவாசம் மேலும் வலிமை பெறும்.

முன்னாள் அதிபர் வாரென்.ஜி. ஹார்டிங் கூறியப்படி அமெரிக்கர்கள் என்ற சுடர்விடும் தீபந்தத்தை நாம் இவ்வாறு தான் சுமந்து செல்ல முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்துறையை மேம்படுத்த மேட் இன் அமெரிக்கா திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பது அதிபர் டிரம்பின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எனது நிர்வாக கொள்கைகளால் அமெரிக்காவில் 1400 நிறுவனங்கள் மீண்டும் தங்களை வேலைவாய்ப்புகளை வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

எனது ஆட்சி காலத்தில் அமெரிக்காவில் மட்டும் 60 கோடி வேலை வாய்ப்புகளை உருவாகியுள்ளோம். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிலாளர்களுக்கான சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளன” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.