டிரம்ப்க்கு எதிரான தீர்மானம் தோல்வி!- மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி!

டிரம்ப்க்கு எதிரான தீர்மானம் தோல்வி!- மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி!

தான் தோன்றிதனமாகச் செயல்படுவதில் முன்னிலை வகிக்கும்  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட தடை இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையே எதிர்கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபருக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்த தாக குற்றச்சாட்டு கூறப் பட்டது. இந்த விவகாரத்தில் டிரம்ப், அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாக பயன் படுத்தியதாகவும், இது தொடர்பான விசாரணையில் பாராளுமன்றத்துக்கு இடையூறு ஏற்படுத்தி யதாகவும் இரண்டு குற்றச்சாட்டுகளை ஜனநாயக கட்சி கூறியது.

இதையடுத்து டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்தது. இதன் விசாரணை முடிந்ததையடுத்து டிரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கடந்த டிசம்பர் மாதம் நிறை வேறியது. இதற்கிடையே செனட் சபையில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால் செனட் சபையில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கான வாக்கெடுப்பில் டிரம்புக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2-வது குற்றச்சாட்டான, பாராளு மன்ற விசாரணைக்கு இடையூறு செய்தார் என்ற வாக்கெடுப்பில் டிரம்புக்கு ஆதரவாக 53 உறுப்பினர்களும், எதிராக 47 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதனால் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டார். இதனால் வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட தடை இல்லை. பதவி நீக்க தீர்மான நடவடிக்கைக்கு பிறகு அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெறுகிறார். டிரம்புக்கு எதிரான தீர்மானத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமென்றால் அவருக்கு 66 உறுப்பினர்கள் வாக்களித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!