‘ட்ரம்ப் கோ பேக் ’- லண்டனில் அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பலை!

‘ட்ரம்ப்  கோ பேக் ’- லண்டனில் அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பலை!

அமெரிக்க அடாவடி பெரியண்ணாவான ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் உள்ள முக்கிய வீதிகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு, நிறவெறி, சர்ச்சைக்குரிய அரசியல் ஆகியவற்றிற்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். மேலும், இஸ்லாமியர்கள் மீதான தடைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அகதிகளுக்கு தடை, வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு, வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி மீது கூடுதல் வரி, விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ஆகியோர் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, ராணி எலிபெத் உள்ளிட்டோரை ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இங்கி லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, முன்னர், அந்நாட்டின் பிரதமர் தெரசா மே அவர்களை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து உரையாடினார்.

இதையடுத்து, 92 வயதாகும் இங்கிலாந்து ராணியை அவர் நேற்று நேரில் சென்று சந்தித்தார். அப்போது ராணி சார்பில் ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு டீ விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து 25 நிமிடங்களுக்கு நடந்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு முடிந்ததை அடுத்து ட்ரம்ப் ஸ்காட்லாந்து புறப்பட உள்ளார். அங்கு அவருக்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, ஹெல்சின்கி புறப்படுகிறார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளா

இந்நிலையில் ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ட்ரம்ப் திரும்பி போ’ என்ற கோஷத்துடன் லண்டனில் பேரணிகள் நடந்து வருகின்றன.சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரசாரங்கள் நடந்து வருகின்றன. லண்டன் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் ட்ரம்புக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல பகுதிகளில் இருந்து வந்திருந்த எதிர்ப்பாளர்கள் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரம்ப்பை கிண்டல் செய்து அவர்கள் பலூன்களையும் பறக்க விட்டனர். ட்ரம்ப் பேபி பலூன் ஒன்றை போராட்டக்காரர்கள் பறக்க விட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு, அமெரிக்காவுக்கு எதிரான போராட்டமாக இதை பார்க்கத் தேவையில்லை, அதிபர் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டமாகவே பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!