ட்ரூ காலரில் பேசும் வசதி – விரைவில் அறிமுகம்! – AanthaiReporter.Com

ட்ரூ காலரில் பேசும் வசதி – விரைவில் அறிமுகம்!

இப்போதெல்லாம் பாத்ரூமில் கூட செல் போன் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதில் சில நேரங்களில் வரும் தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்க்க வேண்டி வரும்.  அந்த அழைப்புக்குரிய எண்ணை ட்ரூ கால்ரில் பதிவு செய்து வைத்திருந்தால், அந்த அழைப்பை ஏற்காமல் தவிர்க்க லாம். புதிய எண்ணிலிருந்து தொந்தரவு தரும் அழைப்புகளை தவிர்க்க வேண்டுமானால், அது தெரிந்தவர்கள் அழைப்பா, அல்லது தவிர்க்க வேண்டிய அழைப்பா என தெரியாது. அதற்காகவே உருவாக்கபட்டதுதான் “True Caller” செயலி. தற்போது பெரும்பாலானோ ரால் பயன்படுத்தும் ஆப்- ஆகி விட்ட ட்ரூ காலர் மூலம் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் சேவையை அடுத்த மாதத்திலிருந்து தனது ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் அறிமுகப் படுத்தவுள்ளது!

இதுவரை 200 கோடிக்கும் அதிகமான எண்கள் பதியப்பட்டுள்ள ட்ரூ காலர் செயலி தனது வாடிக்கை யாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வரும் நிலையில் , தற்போது இணைய அழைப்பினையும் அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது. இந்த நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை தற்போது சோதித்து வருவதாகவும், விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்து, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த வசதியை, ‘ட்ரூ காலர் வாய்ஸ்’ (Truecaller Voice) என்ற தனி செயலி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தப்போவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ட்ரூ காலர் நிறுவனம். மேலும், இந்த செயலி முதலில் ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்களுக்கே அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ட்ரூ காலர் நிறுவனம், ‘ட்ரூ காலர் வாய்ஸ்’ செயலி பற்றி தெரிவிக்கையில்., இந்த செயலி வாடிக்கை யாளர்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்து ‘இலவச, உயர்தர, தாமதமற்ற’ தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள உதவும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயலியில், அழைப்பு பதிவுகள், எஸ்எம்எஸ் இன்பாக்ஸ், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றையும் பார்த்துக்கொள்ளலாம்.

இன்னும் அறிமுகமாகாத நிலையில், ஆண்ட்ராய்டில் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்துபவர் களுக்கு ‘ட்ரூ காலர் வாய்ஸ் சார்ட்கட்’ என்ற பெயரில் இந்த வசதியையும் ட்ரூ காலர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 10 அன்று ஆண்ட்ராய்டில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலியை ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.