எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலி

எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்த்தப்படி, அங்கு நடைபெறும் ஒலி, ஒளி நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருந்த போது ண்டுவெடித்ததில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் 3 பேர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த 40 பயங்கரவாதிகளை போலீசார் வெவ்வெறு இடங்களில் இன்று சுட்டுக் கொன்றனர்.

பழங்கால ஏழு உலக அதிசயங்களில் என்றுமே எகிப்திய பிரமிடுகளுக்கு ஒரு நீங்கா இடம் உண்டு. இறந்த உடல்களை பாதுகாக்கவே இந்த பிரமிடுகள் என்று வெறுமனே சொல்லிவிட முடியாது. இதில் பழங்கால எகிப்தியர்களின் பிரம்மாண்டம், ஆன்மீக நம்பிக்கைகள், திகைப்பூட்டும் பழக்கங்கள், மர்மங்கள் என்று பல விஷயங்கள் புதைந்துள்ளன.

இதையொட்டி எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக வியட்நாமைச் சேர்ந்த 14 சுற்றுலாப் பயணிகள் உள்பட 16 பேர் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, கிஜா பிரமிடு அருகில் உள்ள மரியோத்தியா என்ற இடத்தில் சென்ற போது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 3 சுற்றுலாப் பயணிகள், மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் உயிரிழந்தனர் எகிப்தைச் சேர்ந்த டிரைவர் உள்ளிட்ட 11 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் எகிப்து மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள், சுற்றுலா பகுதிகள் மற்றும் வழிபாட்டு தளமான தேவாலயங்களில் பயங்கரவாதிகள் குழு ஒன்று அடுத்து அடுத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தேசிய பாதுகாப்பு அதிகரிகளிடம் இருந்த போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.

இதையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் கிஜா கவர்னரேட் பகுதியில் இரண்டு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு 30 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

மேலும் வட சினாய் பகுதியில் 10 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர் என உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் குண்டு தயாரிக்கும் பொருட்கள் போலீசார் கைப்பற்றினர்.

Related Posts

error: Content is protected !!