பிராமணர்கள்தான் உண்மையான நிகழ்கால தலித்கள்!? – AanthaiReporter.Com

பிராமணர்கள்தான் உண்மையான நிகழ்கால தலித்கள்!?

தற்போது இந்தியாவில் பிராமண சமுதாயத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்களை உயர்ந்த ஜாதி எனக் குறிப்பிட்டு, படிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றில், ரிஸெர்வேஷன் என்னும் ஒதுக்கீடு முறை உயர உயர, அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஸ்ரீ பிராங்கைஸ் கோட்டியர் என்னும் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர், சுமார் 20 ஆண்டுகள், இந்திய பிராமணர்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். அவர், ஒவ்வொரு கட்சியும், வாக்குகளைப் பெற வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில், பற்பல ஜாதியினரை ஆதரிக்க, பிராமண சமுதாயத்தின் அவலநிலை, செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய், மிகவும் அபாய நிலையை அடைந்து வருவதாகக் கூறுகிறார். பிராமணர்கள் உயர்ந்த ஜாதி எனப்படுவதால், அவர்கள் ஏதோ கோடீஸ்வரர்கள் என்னும் நோக்கில், கடந்த 70 ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் தான் உண்மையான நிகழ்கால தலித்கள் என்றும் அவர் சொல்கிறார்.

வாக்கு வங்கி அரசியலைத் தொடங்கியது காங்கிரஸ் கட்சிதான் என்றும், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் வளைத்து தன்னிடம் வைத்திருக்க, இக்கட்சி, மேற்கொண்ட செயல்களால் தான் முற்பட்டோர் என சொல்லப் படுவோர் மிகவும் கேடுகெட்ட நிலைக்குத் தள்ளப் ;பட்டதாகவும் கூறும் , ஸ்ரீ கோடியர் , முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித் தூவிய காங்கிரஸ், ஹிந்துக்களை, குறிப்பாக பிராமணர்களை, நடுச் சந்தியில் நிறுத்தியதாகவும் கூறுகிறார்.  வாக்குக்காக, ஏகப்பட்ட ஜாதிகளை மிகவும் பிற்பட்டோர் எனச் சேர்த்து, பிற்படுத்த சமுதாயத்தின் ஒதுக்கீட்டை 49.5 % அளவுக்கு உயர்த்திய காங்கிரஸ் அரசு, முற்பட்டோர் என்று அழைக்கப்படும் ஹிந்துப் பிரிவினரைக் கண்டுகொள்ளவே இல்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.

இதனால், முற்பட்ட சமுதாயத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி, அரசுப் ப்ணிகளில் அவர்கள் முற்றிலும் இல்லையென்னும் நிலை ஏற்பட்டுள்ளது என்னும் ஸ்ரீ கோட்டியர், டில்லியில் உள்ள 50 “சுலப் ஷௌசாலயா” என்னும் பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது இப்போது பிராமணர்கள் தான் என்றும், ஓவ்வொரு கழிப்பிடத்திலும் சுமார் 5 பிராமணர்கள் பணி புரிகிறார்கள் என்றும், தாழ்த்தப் பட்ட சமூகத்தினர் தான் இப்பணிகளுக்கு ஒதுக்கப் படுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் சொல்கிறார்.

மேலும், அவர், டில்லியில் உள்ள ரிக்க்ஷா இழுப்பவர்களில் 50% ம், காசியில் ரிக்க்ஷா இழுப்பவர்களில் பெரும்பான்மையினரும் பிராமணர்களே என்று சொல்கிறார்.  சுமார் 4 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் அவர்கள் சொந்த ஊரிலேயே அநாதைகளாகப் போனதற்கு, அரசியலே காரணம் என்று விவரிக்கும் இவர், ஆந்திராவில் 75% பிராம ணர்கள், சமையற்காரர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். புரோகிதர்களும், பண்டிட்களும், ஏழ்மைக் கோட்டுக்குக் கீழேதான் இருப்பதாகவும், அவர்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்வதில்லை என்றும் எடுத்துக் காட்டுகிறார். இப்போது, மாணவர்களில்கூட, பிராமண சமுதாயத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது என்று கூறும் இவர், அதற்கு அவர்களது ஏழ்மை நிலை தான் காரணம் எனச் சொல்கிறார்.

அத்துடன் அவர்களுக்கு, மற்ற ஜாதி மாணவர்களைப் போலன்றி, ஸ்காலர்ஷிப் போன்றவை கிடைப்பதில்லையாம்.
50% பிராமணர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்றும் அவர்களது மாத வருமானம் 650 ரூபாய் தான் என்று சொல்லும் இவர், கர்நாடக அரசின் தகவல்படி, அங்கு கிறிஸ்தவர்களின் பெர் கேபிடா வருமானம் 1562, ரூபாய் எனவும், ஒக்கலிகாவின் வருமானம் 914 என்றும், முஸ்லிம்களின் வருமானம் 794 ரூபாய் என்றும், தாழ்த்தப் பட்டவர்களின் வருமானம் 680 ரூபாய் என்றும், தாழ்த்தப்பட்ட மலைவாசிகளின் வருமானம் 577 ரூபாய் என்றும், பிராமணர்களின் வருமானம் 537 ரூபாய் என்றும் சொல்கிறார்.

நாட்டில் உள்ள புரோகிதர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக மாதம் 500 ரூபாயில் குடித்தனம் செய்வதாகக் கூற்ம் ஸ்ரீ கோடியர், இவர்கள் அனைவருமே வேத சாஸ்திரத்தில் கரைகண்டவர்கள் எனச் சொல்லி அவர்கள் அவலநிகையை எண்ணி வருந்துகிறார். தமிழ் நாட்டில் , ஸ்ரீ ரங்கனாதர் ஆலயத்தில், ஒரு குருக்களுக்கு மாத சம்பளம் 300 ரூபாயும், தினம் கொஞ்சம் சாதமும் தான் எனக் கூறும் ஸ்ரீ கோடியர், இந்திய அரசு, இமாம்களுக்கு 1000 கோடியும், ஹஜ் யாத்திரைக்கு 200 கோடியும் கொடுக்கும்போது, ஏன் முற்பட்ட சமுதாயத்தையும், குறிப்பாக பிராமண சமுதாயத்தியும் தூக்கிவிட முன்வர வில்லை என வினவுகிறார்.தலித் முன்னேற்றம் என்ற பெயரில், முற்பட்ட சமுதாயத்தை பின்னால் தள்ளிய பெருமை எல்லாம் வாக்கு வங்கியைப் பலப்படுத்த காங்கிரஸ் செய்த சூழ்ச்சி என சொல்கிறார் ஸ்ரீ கோடியர். ஆண்டுகளாகச் செய்து, தன் வாக்கு வேட்டைக்காக, நாட்டைக் குட்டிச்சுவராக்கியது என்பது நன்கு விளங்கும்.