தமிழக மாநில மக்களே நீங்க கடைசி வரைக்கும் நிர்வாணமா போராடுங்க!

தமிழக மாநில மக்களே நீங்க கடைசி வரைக்கும் நிர்வாணமா போராடுங்க!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து…… இன்றைய சன்டேவில் நாம வாசிக்க போவது….பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை புடுங்கி தின்னுதாம் அனுமாரு என்னும் இந்தியாவின் 50% வரியை தமிழகம் உட்பட நாலே மாநிலங்கள் இந்தியாவுக்கு அளித்தாலும் அதை வைத்து அதே தமிழக விவசாயிகளின் பாங்க் லோனை தள்ளுபடி செய்யாமல் நோகாம நோம்பு கும்புடுற இந்தியாவின் பெத்த மாநிலம் UP….ஜஸ்ட் மாநிலம் தான் அவை, as well கர்னாடகா என்னும் பல மாநிலங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் அரசுகள் இந்த தமிழகத்தின் வரி பணத்தை தான் உபயோகப்படுத்துகிறது…… உண்மை என்ன என்று தெரிய மேலும் படிக்கவும்…!

உபி மாநிலம் தன் கடனை அடைக்க தேவையான அமவுன்ட் 36000 கோடிகள் அதை கடனாக பெற வேண்டும். அவ்வகை கடனை பெற அது மத்திய அரசை தான் காரன்டராக சேர்க்கும். அவ்வகை கேரன்டராக இருக்க கல்லாபெட்டியில் பணம் வேண்டும். மத்திய அரசாங்கம் எப்படி தன் கல்லாபெட்டியில் இருந்து இந்த பணத்தை கொடுக்கும் என்பதை விளக்குகிறேன். இந்த மாதிரி 36000 கோடி மற்றும் பல ஆயிர கோடிகளின் கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ( இன்டே ரக்டா மானில அரசு) 29 மானிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரேதசங்கள் இனைந்து 36 மாநிலங்களின் இணைந்து வருமான வரி, கார்ப்ரேட் வரி, எக்ஸைஸ் வரி, சர்வீஸ் வரி, விற்பனை வரி என மாநில அரசின் மக்களிடம் இருந்து கப்பம் கட்ட பெறும்.

இப்போது தான் முக்கிய தகவல் ஒன்றை நீங்கள் காண போகிறீர்கள். இத்தனை வகையான வரி களை மத்திய அரசுக்கு தரும் 36 மாநிலங்களில் 50% சதவிகிதம் அதாவது பாதிக்கு பாதி தரும் மாநி லங்கள் வெறும் 4 மாநிலங்கள் தான். அது தமிழகம், குஜராத், கர்னாடாகா மற்றும் மஹாராஸ்ட்ரா. இன்னும் விரிவாய் வேண்டுமெனில் இந்தியாவின் வர்த்தக மாநிலம் ( ஃபைனான்ஸியல் கேப்பிட்டல்) மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் சுமார் 32000 ரூபாய்கள் விகிதம் மத்திய அரசுக்கு வரியாக செலுத்துகின்றனர். இது போக மற்ற மூன்று மாநிலங்களான தமிழகம், குஜராத் மற்றும் கர்னாடகாவின் மாநில மக்கள் ஒவ்வொருவரும் சுமார் 20,000 ருபாயை மத்திய அரசுக்கு வரியாக செலுத்துகின்றனர். அதே சமயம் உதாரணத்திற்க்கு இந்தியாவின் பெத்த மாநிலங்களான உபி / மத்தியபிரேதசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் தொகை எவ்வளவு தெரியுமா வெறும் 6000 ரூபாய்கள் தான் .

சரி கணக்கு சரி இதனால் என்னா? என்று கேட்பவர்களுக்கு மட்டும். இவ்வகை மாநிலவாரியாக மத்திய அரசுக்கு செலுத்தும் பணமானது மத்திய அரசு மட்டும் வைத்து கொள்ள முடியாது அதை 58% மத்திய அரசின் செலவீனங்களுக்கும், 42% மானில அரசுக்கும் செலவு செய்ய வேண்டியது கடமை. இதிலும் மத்திய அரசின் வஞ்சகத்தை நீங்கள் பார்க்க முடியும் அதாவது உதாரணத்திற்கு  ஒவ்வொரு 100 ரூபாய் வரி தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பினால் அதை மத்திய அரசு 66 ரூபாயை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து கொண்டு வெறும் 34 ருபாய்களை தான் மாநிலத்திற்குத்  தரும். அவ்வகை 66 ரூபாய்கள் தான் மற்ற மாநில விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய ஏதுவாகிறது. அது எப்படியெனில் பெத்த மாநிலமான உ. பி அனுப்பும் 100 ரூபாய் வரிக்கு கைமாறாக கிடைக்கும் தொகை மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு தெரியுமா 200 ரூபாய்கள். பீகாரின் 100 ரூபாய் வரிக்கு 400 ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும்.

இந்த மாதிரி டெல்லி வரை சென்று முழு நிர்வாண போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு தெரிவதில்லை நம் மாநில பணங்கள் தான் பல மாநில விசாயிகளின் கடனை தள்ளுபடி செய்கிறது என்று ஆனால் இந்த பெத்த பீத்த பெருமை அந்த மானில அரசுகளின் முதல்வர்களுக்கு சென்று சேர்கிறது நாமும் அந்த மாநிலத்தை பார் அந்த ஆளும் கட்சியை பார் அந்த முதல்வரை பார் என பெருமை பேசுவது முற்றிலும் தவறு. ஆனாலும் கடைசி வரை நமக்கு பட்டை நாமம் தான். இது ஜூன் வரை அதோ இதோன்னு கொஞ்சம் மாநில வரியை வைத்து கொண்டு காலம் தள்ளும் மாநிலங்களுக்கான முற்றிலும் ஆப்பு தான் ஜிஎஸ்டி………. வரேவற்க கூடிய ஒன்று தான் ஆனால் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு எல்லா வரியையும் கொண்டு சென்று அவர் பெட்டியில் வைத்து நமக்கு கிள்ளியும் வேலையை, வரியை ஒழுங்கா கட்டாமல் இருக்கும் பல சோம்பேறி மாநிலங்களுக்கு இன்னும் அதிகம் செலவு செய்யும் என்பதை நினைத்தால் தான் மனதிற்கு  கஷ்டமாக இருக்கிறது.

இந்த ஜிஎஸ்டி நாட்டுக்கு முக்கியம் என்பதை விட இந்தியாவின் நாட்டு மக்களுக்குதான் முக்கி யம்னு பெருமை பீத்தும் அரசியல் வாதிகளுக்கு ஒரே கேள்வி அப்படினா பெட்ரோல் டீசல் ஏன் இந்த ஜிஎஸ்டி வரிக்குள் வரவில்லை வந்தால் நீங்கள் 65 ரூபாய்க்கு  வாங்கும் பெட்ரோல் நாளை முதல் 41 ரூபாய்கு கொடுக்கணும் அதுவும் அதிக பட்ச ஜிஎஸ்டி 28% கட்டின பிறகும்….. இதனால் வாய் மூடி மவுனியாக பல மத்திய அரசு அரசியல்வாதிகள் இன்று நாட்டில்……….. நல்ல வேலை செஞ்சு, கரெக்டா வரி கட்டி மத்த மானிலங்களை வாழவைக்கும் நாலு மாநிலங்களின் ஒன்றான தமிழக மாநில மக்களே நீங்க கடைசி வரைக்கும் நிர்வாணமா போராடுங்க உங்க கோவணத்தை கூட விட்டு வைக்காம அதை சால்வையாய் போட்டு மற்ற மாநிலங்களுக்கு பெருமை சேர்க்கும் நாம் ஒரு பாவபட்ட பிச்சை பெருமாள்கள் தான். நன்றி ஜெய் ஹிந்தி…………..பேசும் மாநிலங்கள்

error: Content is protected !!