கல்லுாரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ‘டி.என்.செட்-2018’ தேர்வு ! – AanthaiReporter.Com

கல்லுாரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ‘டி.என்.செட்-2018’ தேர்வு !

கல்லுாரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ‘டி.என்.செட்-2018’ தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு 2018 மார்ச் 4ம் தேதி நடக்கிறது. கல்லுாரி மற்றும் பல்கலைக்க ழகங்களில் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமெனில், முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் நெட் தேர்வை சி.பி.எஸ்.இ., யும், செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகமும் நடத்துகிறது. 2018ம் ஆண்டுக்கான தேர்வை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

பிரிவுகள் : வேதியியல், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், கல்வியியல், எலக்ட்ரானிக்ஸ், ஆங்கிலம், புவியியல், இந்தி, வரலாறு, மனையியல், ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன், சட்டம், சமஸ்கிருதம், லைப் சயின்ஸ், நிர்வாகவியல், தமிழ், தெலுங்கு, பிசிக்கல் சயின்ஸ், உளவியல், அரசியல் அறிவியல், சோசியல் ஒர்க், சோசியாலஜி, எர்த் சயின்ஸ், லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சர்வீஸ் உள்ளிட்ட 26 பாடப்பிரிவினர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது : இந்தத் தேர்வுகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பு தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, விழுப்புரம், காரைக்குடி, வேலுார், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மையங்களில் நடத்தப்படும்.
கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1500, ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.1250, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 பிப்., 9.

விபரங்களுக்கு :
www.otherteresawomenuniv.ac.in