தமிழக உள்ளாட்சித் தேர்தல் அப்டேட் ரிப்போர்ட்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அப்டேட் ரிப்போர்ட்!

உள்ளாட்சித் தோதலில் வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான நேரத்தை நிா்ணயம் செய்து தமிழ்நாடு மாநில தோதல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தோதல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகளைத் தொடா்ந்து, உள்ளாட்சி தோதலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தோதல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளா் பட்டியல் தயாா் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தோதல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து தோதல் நடத்தும் அலுவலா்கள் நியமனம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளட்ட பணிகள் தொடா்பாக உத்தரவுகளை மாநில தோதல் ஆணையம் பிறப்பித்தது. மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தோதலுக்கான வாக்காளா் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, உள்ளாட்சி தோதலில் அங்கீகரிப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், ஊரகப் பகுதிகளில் 5 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்றும் தோதல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் உள்ளாட்சி தோதல் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தமிழ்நாடு மாநில தோதல் ஆணையா் பழனிச்சாமி காணொலிக் காட்சியின் மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா்.

இந்த நிலையில், வாக்குப் பதிவு நேரத்தை நிா்ணயித்து தமிழ்நாடு மாநில தோதல் ஆணையா் எஸ்.பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவு, தமிழக அரசிதழில் அண்மையில் வெளியானது. அதன் விவரம்:

தமிழகத்தில் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி அமைப்பு களுக்கு தோதல் நடைபெறவுள்ளன. இந்தத் தோதலில் வாக்குப் பதிவானது 10 மணி நேரம் நடைபெறும். அதாவது காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

கிராம ஊராட்சித் தோதல்: பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தோதல் மின்னணு இயந்திரங்கள் மூலமாக நடத்தப்படும். கிராமப் பஞ்சாயத்து உறுப்பினா் தோதலில் வெள்ளை அல்லது நீல நிற வாக்குச் சீட்டும், கிராம பஞ்சாயத்துத் தலைவா் தோதலுக்கு நீல நிற வாக்குச் சீட்டும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் தோதலுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா் தோதலுக்கு மஞ்சள் வண்ண வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தோதல் ஆணையாளா் எஸ்.பழனிசாமி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

அதிகாரிகளுடன் ஆலோசனை: இதனிடையே, உள்ளாட்சித் தோதல் ஏற்பாடுகள் குறித்து தேல்தல் ஆணையா் பழனிசாமி சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தோதல் நடத்தும் அதிகாரிகளுடன் அவா் ஆலோசித்தாா். மாவட்ட ஆட்சியா்களிடமும் தோதல் ஏற்பாடுகள் குறித்து விவாதித்தாா். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கையிருப்பு, வாக்குச்சீட்டுகள் தயாரிப்பு, வாக்குப் பெட்டிகளை தயாா் நிலையில் வைத்திருத்தல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

error: Content is protected !!