அறிவிச்சிட்டாய்ங்கய்யா – உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிச்சிட்டாய்ங்க! – AanthaiReporter.Com

அறிவிச்சிட்டாய்ங்கய்யா – உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிச்சிட்டாய்ங்க!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வரும் டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங் களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் ஆர். பழனிசாமி இன்று அறிவித்து உள்ளார். அதேசமயம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதோ.. அதோ. என்று இழுத்து கொண்டிருந்த நிலையில் கோயம் பேட்டில் உள்ள மாநில தேர்தல் அலுவலகத்தில் அதன் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங் களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 6ம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13ம் தேதியும்,

வேட்புமனு ஆய்வு டிசம்பர் 16ம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது டிசம்பர் 18ம் தேதியும் நடைபெறும்.

வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று ஆணையர் அறிவித்தார்.

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோர், ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஊராக உள்ளாட்சி அமைப்பு பதவிகளான, ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப் பதிவின்போது, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களில், வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல்?

நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி களுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் ஆர். பழனிசாமி தகவல் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட் பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகின்றது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, தேர்தல் அமைதி யாகவும், நேர்மையாகவும், சுந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் ஆணையத் தோடு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு நகல் கீழே தரப்பட்டுள்ளது. முழு நகல் செய்தியையும்பார்வையிட கீழே சொடுக்கவும்.