கட்டிட, மனை விற்பனைக்கான புதிய விதிகள் – தமிழக அரசு வெளியிட்டது!

கட்டிட, மனை விற்பனைக்கான புதிய விதிகள் – தமிழக அரசு வெளியிட்டது!

தமிழக அரசு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதல், மேம்படுத்துதல்) தொடர்பான விதிகளை வரையறுத்து வெளி யிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மத்திய அரசு சமீபத்தில் கட்டிட, மனை விற்பனை (முறைப் படுத்துதல், மேம்படுத்துதல்) சட் டத்தை அமல்படுத்தியது. அதன்படி, தமிழக அரசும், தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத் துதல், மேம்படுத்துதல்) தொடர்பான விதிகளை உருவாக்கியுள்ளது. இதற்கான அறிவிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் படி ஒழுங்கு முறை குழுமத்துக்கான தலைவர், குழுமம் மற்றும் தீர்ப்பாயத்தின் 2 உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட வேண்டும். இதற்கான பரிந்து ரைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, வீட்டுவசதித்துறை மற்றும் சட்டத்துறை செயலர் அடங்கிய குழு அளிக்கும்.

அதுவரை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் குழுமத்தை வழிநடத்துவார்.  தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதியின் முக்கிய அம்சங்கள்:

500 சதுரமீட்டர் நிலப்பரப்பளவு அல்லது 8 வீடுகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டிடம், மனை விற்பனையில் ஈடுபடுவோர், குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இவ்விதிகள் தற்போது நடந்து வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களுக்கும் பொருந்தும். குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்த ஒரு கட்டிடம், மனையை விற்பனை செய்ய முடியாது.

வீடு, மனை வாங்குபவர்களிடம் இருந்து திட்டத்துக்காக வசூலித்த 70 சதவீத தொகையை அந்த திட்டத்துக்கென தனிக்கணக்கு தொடங்கி டெபாசிட் செய்ய வேண்டும். அக்குறிப்பிட்ட திட்டம் மற்றும் கட்டிட செலவுக்கு மட்டும் அதை பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கட்டுமான நிறுவனத்தினரும் தனது திட்டத் துக்கான நிலத்தில் எவ்வித வில்லங்கமும் இல்லை, அதற்கான சட்டபூர்வ உரிமை பெற்றவர் என உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். அத்திட்டம் நிறைவடையும் காலத்தையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தில் சான்றளிக்க வேண்டும்.

எழுத்துபூர்வமான ஒப்பந்தம் இல்லாமல், வீடு வாங்குபவரிடம் இருந்து வீட்டின் மதிப்பில் 10 சதவீதத்துக்கு அதிகமான பணம் பெறக் கூடாது. அப்பத்திரத்தில் மொத்த வீடுகளின் மதிப்பையும் குறிப்பிட்டு பெற வேண்டும். வீடு வாங்குபவர்களுக்கு அனைத்து வீடுகளும் கம்பள பரப்பளவு (கார்பட் ஏரியா) அடிப்படையில் விற்கப்பட வேண்டும்.

தண்டனை உண்டு

கட்டுமான நிறுவனத்தினர் திட்டத்துக்கான பணிநிறைவு சான்றிதழை உரிய அதிகாரிகளிடம் இருந்து கட்டாயமாக பெற வேண்டும். வீடு வழங்கப்பட்ட பின் 5 ஆண்டுக்குள் கட்டுமானத்திலோ, வேலைப்பாட்டிலோ, தரத்திலோ, சேவையிலோ ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் அதை கட்டுமான நிறுவனத்தினர், தங்கள் சொந்த செலவில், 30 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து தரவேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் குழுமம் அல்லது தீர்ப்பாளரால் பிறப்பிக் கப்படும் முடிவுகளால், உத்தரவு களால் பாதிக்கப்பட்டவர்கள், தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

தீர்ப்பாயம் ஒரு தலைவர் மற்றும் 2 உறுப்பினர் களை கொண்டிருக்கும். உறுப்பினர் களில் ஒருவர் நீதித்துறை சார்ந்த வராகவும், மற்றொருவர் நிர்வாகம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்தவராகவும் இருப்பார்.

இச்சட்டத்தின் கீழ் பல்வேறு அபராதங்கள் விதிக்கப்படுகிறது. அபராதங்கள் திட்டமதிப்பீட்டில் 10 சதவீதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டணை அல்லது 2-ம் சேர்ந்தோ விதிக்கப்படலாம்.

இணையதளத்தில் பதிவேற்றம்

குழுமத்தின் இணையதளத்தில், பதிவு தொடர்பான தகவல்கள். திட்டத்தில் உள்ள குடியிருப்பின் வகை, மனைகளின் விற்பனை விவரம், பெறப்பட்ட அனுமதி உள்ளிட்ட விவரங்களை கட்டுமான நிறுவனத்தால் கட்டாயம் பதிவேற் றம் செய்யப்பட வேண்டும்.

கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் நுகர்வோர் தங்கள் கடமையில் தவறும்பட்சத்தில், ஒரே விதமான சதவீதத்தில் வட்டி செலுத்த வேண்டியது கட்டாயமாகும். வாடிக்கையாளர், நுகர்வோர், ஒதுக்கீட்டாளர் தமக்கு வேண்டிய தகவல்கள், திட்ட வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை குழும இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழக அரசின் கட்டிட, மனை விற்பனை ஒழுங்கு முறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபர் யூனியன் பிரதேசத்தை யும் இணைத்துக் கொள்ள தமிழக அரசு மத்திய அரசிடம் இசைவு அளித்துள்ளது.

குழுமத்தின் அலுவலகம் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையின் 3-ம் தளத்தில் தற்காலிகமாக இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!