பேரறிவாளன், நளின் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : கவர்னருக்கு முழு அதிகாரமிருக்காம்! – AanthaiReporter.Com

பேரறிவாளன், நளின் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : கவர்னருக்கு முழு அதிகாரமிருக்காம்!

நாட்டில் பல தரப்பிலில் இருந்தும் கோரிக்கை வைத்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் முடிவு எடுக்காத காரணத்தினால், 7 பேர் விடுதலையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நளினி தாக்கல் செய்த ஆட் கொண்வு மனுவில், அரசின் முடிவுக்கு பிறகும் தான் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். பேரறிவாளன் கருணை மனு மீதும் கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம். நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை கடந்த 2018 ல் நிராகரிக்கப்பட்டுவிட்டது. சட்டவிரோத காவலில் உள்ள நளினி, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து, இந்த வழக்கு வரும் 12ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.