தமிழக பட்ஜெட் ; வரும் 15ம் தேதி தாக்கல்!

தமிழக பட்ஜெட் ; வரும் 15ம் தேதி தாக்கல்!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15–ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் துவங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த மாதம் 12-ம் தேதி ஜெயலலிதா திருவுருவ படத்தை திறந்து வைக்கப்பட்டது. வரும்  31-ம் தேதிக்குள் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தயாரிக்கும் பணியை கவனித்து வருகிறார். பட்ஜெட் முதல்வரும் துணை முதல்வரும் பட்ஜெட் குறித்து கூட்டாக ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.

சட்டசபை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்று விட்டதால் அந்த பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கல்செய்வதும்  தாமதம் ஆனது. தற்போது சபாநாயகரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்த சீனிவாசன் சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 15-ம்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 15-3-2018ம் நாள், வியாழக்கிழமை, காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2018-19ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.

இவ்வாறு சட்டசபை செயலர் சீனிவாசன் தனது அறிக்கையில்  கூறியுள்ளார்.

error: Content is protected !!