தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.210 கோடி செலவாகியிடுச்சு!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இன்று சென்னையில் பேட்டி அளித்தார் அப்போது அவர், “தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.210 கோடி செலவானது. தேர்தல் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டும் ரூ.25 கோடி செலவு செய்யப்பட்டது. வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை வரும் ஜூன் மாதம் 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தேர்தலின் போது பறக்கும் படையினரால் மொத்தம் ரூ.105.2 கோடி பறிமுதல் செய்யபட்டு உள்ளது. இதில் ரூ.47.4 கோடி பணம் உரிய ஆவணங்கள் காட்டியதால் பறிமுதல் செய்யப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது. தமிழக தேர்தலுக்காக ரூ.210 கோடியும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.25 கோடியும் செலவானதாக தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் செலவு செய்துள்ள ஒவ் வொரு வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை ஜூன் மாதம் 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அடுத்த தேர் தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி விடும்.

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மரணம் குறித்து கலெக்டர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். மிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவெடுத்து அறிவிக்கும்.

தேர்தலின்போது வாக்குப் பதிவு என்ன காரணத்தினால் குறைந்தது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் வாரியாக ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிவோம். எதிர்காலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்கு இந்த ஆய்வு உறுதுணையாக அமையும்” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!