டைம் பத்திரிகை கை மாறியது!

டைம் பத்திரிகை கை மாறியது!

ஆங்கிலத்தில் வெளியாகி உலகமெங்கும் சக்கை போடு போடும் டைம் பத்திரிக்கை 1923 -ஆம் ஆண்டு ஹென்றி லூஸ் மற்றும் பிரிட்டன் ஹடன் (Henry luce & briton hadden) ஆகியோரால் தொவங்கப்பட்டது. இதன் முதல் பிரதி 1923 மார்ச் 3-ஆம் தேதி அன்று பிரசுரிக்கப் பட்டது. தர்போது இந்த இதழின் மொத்த சர்க்குலேஷன் 30 லட்சம். 2.6 கோடி வாசகர்கள் இருக்கிறார்கள். நியூயார்க் நகரில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த டைம் இதழை சேல்ஸ் போர்ஸ் என்ற சேவைத்துறை கம்பெனி வாங்கியுள்ளதாக அந்த இதழின் மெரிடித் கார்ப்பரேட் நிர்வாகம் நேற்று (செப்-16) தெரிவித்துள்ளது.

இண்டர்நேஷனல் லெவலில் எக்கச்சக்க பாப்புலாராட்டியுடன் விளங்கும் அமெரிக்காவின் முக்கிய மீடியா நிறுவனங்கள் கை மாறுவது அதிகரித்து வருகிறது. வாஷிங்டன் போஸ்ட் அமேசான் நிறுவனத்தால் 250 மில்லியன் டாலர்களால் சமீபத்தில் வாங்கப்பட்டுள்ளது.பாஸ்டன் ரெட் ஃபோக்ஸ் அதிபர் ஜான் ஹென்றி ‘பாஸ்டன் குளோப்’ பத்திரிகையை சொந்தமாக்கினார். பயோடெக்னாலஜி துறையில் கொடிக்கட்டிப்பறக்கும் பேட்ரிக் சூன் சியாங், ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகை நிறுவனத்தைக் கைப்பற்றினார். பெரும் பணக்காரர் வாரன் பப்பட்டும் மீடியாத் துறையில் முதலீடு செய்துள்ளார். மெடிரித் கம்பெனி நடத்தி வரும் பார்ச்சூன்,மணி அன்ட் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் இதழ்களை விற்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன

அந்த வகையில்தான், புகழ் பெற்ற ‘டைம்’ இதழும் கைமாறியுள்ளதாக்கும். சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவன அதிபர் மார்க் பெனியாஃப், அவரின் மனைவி லின்னி மெர்டித் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ‘டைம்’ இதழை 190 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளனர்.

இது குறித்து மெரிடித் கார்ப்பரேட் கம்பெனியின் மூத்த அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, மெடிரித் கார்ப்பரேட் கம்பெனியானது டைம் இதழை 190 மில்லியன் டாலர்களுக்கு மார்க் பெனியோப்ஸ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளது. மார்க் பெனியோப்ஸ் என்பவர் சேல்ஸ் போர்ஸ் என்ற சேவைத்துறைக் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவராவர். பெனியோப்ஸ் தனிப்பட்ட முறையில் டைம் இதழை வாங்கியுள்ளார். இதற்கும் சேல்ஸ்போர்ஸ்க்கும் சம்பந்த மில்லை. டைம் இதழின் அன்றாடப்பணிகளில் பெனியோப்ஸ் தலையிட மாட்டார். டைம் இதழின் அன்றாட முடிவுகளை தற்போதைய அந்த கம்பெனியின் நிர்வாகமே எடுக்கும் எனத்தெரிவித்துள்ளார்

மெடிரித் கம்பெனியானது பீப்பிள் அன்ட் பெட்டர் ஹோம்ஸ் என்ற இதழையும் வெளியிட்டு வருகிறது. டைம் இதழை விற்கப்படுவதற்கான அறிவி்ப்பை மார்ச் மாதத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. .

இதே போல வாஷிங்டன் போஸ்ட்டும் அமேசான் நிறுவனத்தால் 250 மில்லியன் டாலர்களால் சமீபத்தில் வாங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!